மே 1 மேஷ ராசியில் இருந்த புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்! இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் என்ன? கெடுபலன்கள் பெறப்போகும் ராசிகள் என்ன?

puthan0

புத்தி காரகனாக விளங்கும் புத பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பெயர்ச்சியாகி கொண்டே இருக்கிறார். அந்த வகையில் மே 1ஆம் தேதி சனிக்கிழமையில் அதிகாலை 5:49 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கும் புதன் பகவான் யாருக்கு நன்மைகளையும், யாருக்கு கெடுபலன்களையும் கொடுக்க இருக்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

puthan

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்குப் பிறகு பேச்சில் இனிமையும், தெளிவும் இருக்கும். எழுத்துத் திறமை உள்ளவர்கள், பாடுபவர்கள் ஆகியோருக்கு சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்கு பிறகு மற்றவர்களிடம் அக்கறையுடனும், அனுசரணையுடன் பேசி பழகுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் என்றாலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தகவல் தொடர்பு விஷயங்களில் லாபம் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பயப்படுவதற்கு எதுவுமில்லை.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்கள் முதல் பெயர்ச்சிக்கு பிறகு தேவையற்ற இயக்குதல் சூழ்நிலைகள் போன்ற விஷயங்களிலும் வெளிநாடு தொடர்பான விஷயங்களிலும் மாற்றங்கள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை புதிய விஷயங்களை கையாள்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் புரிபவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு தயங்கக் கூடாது.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சி காலத்தில் முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். வெளியூர் வெளிநாடு வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபகரமான பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்க்கும் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி காணும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடினமான காலம் நீங்கி ஓரளவுக்கு நிம்மதி இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்கள் முதல் பெயர்ச்சிக்கு பிறகு தொழில் ரீதியான முன்னேற்றத்தை காண்பீர்கள். நீங்கள் எடுக்கும் வியாபார ரீதியான முடிவுகள் சாதகப் பலன் கொடுக்கும். உங்களிடம் பணிபுரியும் மூத்த நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் ஏற்றம் காணலாம். சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்திகள் வரும். தேவையற்ற பேச்சுக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்கு பிறகு அதிர்ஷ்டங்களை பெறப் போகிறீர்கள். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த உழைப்பிற்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் அந்தஸ்தும் அதிகரிக்கும். ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இறை வழிபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற புதிய உறவுகளை தவிர்ப்பது உத்தமம். பொருள் நஷ்டம் பண நஷ்டம் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சனைகளை வளர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சகம்:
Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே கூடுமான வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டு தொழில் புரிபவர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டு.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக எந்த ஒரு முடிவுகளையும் எடுக்கும் முன் சிந்திப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபார ரீதியான எதிரிகளின் தொல்லை ஒழியும். தீட்டி வைத்த திட்டங்கள் சரியாக நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆதரவுகளை பெறுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத புரிதல்கள் ஏற்படுத்தி அவதிப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்:
Magaram rasiமகர ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடி வரும். உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் இணக்கமாக செல்வது உத்தமம். தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோக ரீதியான இடமாற்றம் சாதக பலன்களை கொடுக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றி இறக்கும் நிலை இருக்கும் என்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இடையூறுகள் ஏற்படலாம். எனினும் அவற்றை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். பாகன் அநீதியான பயணங்களின் பொழுது கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. நோய் தாக்குதல்கள் ஏற்படுவதை தடுக்க அடிக்கடி சுத்தத்திலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது.

மீனம்:
Meenam Rasi
மீன ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சிக்கு பிறகு சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மனதில் லட்சியமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதலும், அக்கறையும் ஏற்படும்.கொடுத்த நேரத்திற்குள் கொடுத்து பொறுப்புகளை சரியாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பச்சை நிறப் பொருட்களை அதிகம் பயன்படுத்துங்கள் நல்லதே நடக்கும்.