டிசம்பர் 13 முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

puthan jathagam logo
- Advertisement -

நவகிரகங்களில் ஒருவரான புதபகவான் புத்திசாலித்தனத்திற்கும் ஞானத்திற்கும் புகழ்பெற்ற கிரகமாக விளங்குபவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். அதுமட்டுமின்றி இவர் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகங்களின் இடப்பெயர்ச்சிக்கும் கால இடைவெளி உண்டு. அந்த வகையில் புதபகவான் மிகக் குறுகிய காலத்தில் தன்னுடைய ராசியை மாற்றக் கூடிய தன்மையுடையவர்.

அது மட்டும் இன்றி இவர் அவ்வப்போது வக்கிர நிலையிலும் பயணம் செய்ய கூடியவர். அப்படி பயணம் செய்யும் போது 12 ராசிகளுக்கும் பல விதமான மாறுதல்கள் ஏற்படும். அது நன்மையாகவும் இருக்கலாம் சில ராசிகளுக்கு தீமையாகவும் இருக்கும். அந்த வகையில் டிசம்பர் 13 ஆம் தேதி தனுசு ராசியில் புதன் வக்கிரமாக பின்னோக்கி பயணிக்க உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு மிகவும் மோசமான பலன்களை பெறப் போகின்றன. அது எந்த ராசிகள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மேஷம்

புதனின் இந்த வக்கிர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சாதகமான சூழ்நிலைகள் இல்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சினாலே பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்கள் பணியாற்றுபவர்கள் சுற்றத்தார் என அனைவரிடத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பயணங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் சமயத்தில் பயணத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த செயலை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானத்துடன் செயலாற்றுவது மிகவும் நல்லது.

- Advertisement -

ரிஷபம்

இந்த ராசிக்காரர்களும் புதனின் இந்த வக்கிர பெயர்ச்சியால் பலவித இன்னல்களை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகையால் பேசும் வார்த்தையில் நிதானம் தேவை இல்லாவிட்டால் உறவுகளின் பிரிவு ஏற்பட்டு விடும். செலவுகள் அதிகரிக்க கூடும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் அதிகரிக்கும். காதல், குடும்பம், சுற்றம் என அனைத்திலும் சிக்கல்களை சந்திக்க கூடிய காலம் இது அதனால் எதையும் கவனமாக கையாளுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களும் புதனின் இந்த வக்கிர பெயர்ச்சியால் வாழ்க்கையில் பலவிதமான சிக்கல்களை சந்திக்க போகிறார்கள். தன்னம்பிக்கை தைரியமும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் உறவுகள் பாதிக்கும். சட்டம் தொடர்பான எந்த செயலிலும் இறங்காமல் இருப்பது நல்லது. தேவையற்ற வீண் செலவுகளை குறைக்க வேண்டும். குடும்பம் அலுவலகம் சுற்றும் என அனைத்து இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணியிடத்தில் மிக மிக கவனமாக இருப்பது வேலையை தக்க வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். மோசமான இந்த காலக்கட்டத்தை புத்திசாலித்தனத்தை நிதானமாக கையாளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சனிபகவான் சதய நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்

ஒவ்வொரு கிரகத்தின் மாற்றமும் மற்ற ராசிகளுக்கு பலவிதமான மாறுதல்களை ஏற்படுத்தும். அந்த வகையில் புதபகவானின் இந்த வக்கிர பெயர்ச்சியால் கெடுபலன்களை அனுபவிக்க கூடிய ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இது ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான தகவல்களின் அடிப்படையில் அமைந்த கருத்தாகும்.

- Advertisement -