பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பொருட்களை இப்படி செய்தால் வருமானம் பல மடங்கு பெருகுமாம்! அது ஏன்?

puthan-cash

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறங்கள் ஏற்புடையதாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. அந்த வகையில் புதன் பகவானுக்கு உரிய நிறமாக இருப்பது பச்சை நிறம். புதன் பகவான் அறிவுக்கு உரிய கிரகமாக சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய திறமைக்கும், அறிவுக்கும் உண்டான நன்மைகளை அடைய புதன் பகவான் சரியான இடத்தில் அமர்ந்து இருப்பது அவசியமாகும். சுய ஜாதகத்தில் புதன் பகவானின் நிலை சரியாக அமையாது இருந்தால் நம்முடைய புத்தியும் மந்த நிலை அடைந்துவிடும். இதனால் நாம் வெற்றியை சந்திப்பதே முடியாத காரியம் ஆகிவிடும். புதனின் அருளை பெற, பச்சை நிறப் பொருட்களை என்ன செய்யலாம்? அந்த பொருட்கள் எல்லாம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

puthan

தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றமடைய புதன் பகவானின் அருள் நிச்சயமாக வேண்டும். வருமானம் அதிகமாக பெருகுவதற்கும், புத பகவானின் அருளைப் பெறவும் அவருக்கு உகந்த பச்சை நிறத்தில் இருக்கும் பச்சை மிளகாயை இப்படி செய்யலாம். அதாவது புதன் தசை நடப்பவர்கள் அன்றாட உணவில் சிகப்பு மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது அதிர்ஷ்டத்தை தருமாம். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நீசம் அடைந்திருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம்.

திருஷ்டிக்காக கட்டப்படும் எலுமிச்சை பழத்துடன், பச்சை மிளகாயையும் சேர்த்து கட்டுவது துஷ்ட சக்திகளை துவம்சம் செய்ய சிறந்த பரிகாரம் ஆகும். உங்களுடைய தொடர் கஷ்டங்கள் நீங்கி, வருமானம் அதிகரிக்கக் கூடிய வகையில் நல்ல மாற்றங்கள் நிகழ புதன் பகவானின் பச்சை நிறத்தில் இருக்கும் மரகதலிங்கத்தை வழிபட்டு வர சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். இப்போதெல்லாம் மரகதலிங்கத்தை பார்ப்பது அரிதாகிவிட்டது. உங்களுக்கு தெரிந்த கோவில்களில் மரகதலிங்கம் உண்மையில் இருந்தால் அந்த லிங்கத்தை கட்டாயம் வணங்கி வாருங்கள். புதனுடைய அருளும், சிவபெருமானுடைய அருளும் ஒருசேர உங்களுக்கு கிடைத்து வருமானம் அதிகரிக்கும்.

maragatha-lingam

மந்த புத்தி உடைய குழந்தைகளை மரகத லிங்கத்தை வழிபட செய்யுங்கள். மேலும் அவர்கள் சாப்பிடும் உணவில் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொடுங்கள். பச்சை நிறம் உடலுக்கும், மூளைக்கும் நிறைய நன்மைகளை வாரி வழங்கும். இதனால் உங்களுடைய குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாக வளர்வார்கள்.

- Advertisement -

முந்தைய காலத்தில் உடன் பிறந்த சகோதரிகளுக்கு அந்த வீட்டில் பிறந்த ஆண் பிள்ளைகள் வருடம் தோறும் பச்சை நிற புடவையை பரிசாக வழங்குவார்கள். திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் இது போல் அவர்கள் தொடர்ந்து செய்து வருவார்கள். இதனால் அவர்களுக்கு உள்ளே இருக்கும் பாசப் பிணைப்பு அதிகமாகும். மேலும் இரு குடும்பங்களுக்கு இடையில் பரஸ்பர ஒற்றுமையும் நிலவும். அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தையும் இதன் மூலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

green saree

இதனை இன்று பலரும் மறந்து போய் விட்டார்கள். தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு பச்சை நிற புடவையை ஒவ்வொரு வருடமும் தானம் கொடுத்து வந்தால், பித்ரு தோஷமும் நீங்கி விடும் என்பது ஐதீகம். முன்னோர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்க இது போல் செய்வார்கள். புதனுக்குரிய பச்சை நிறத்தை கொடுப்பதால் தொழில் வளமும், குடும்ப வளமும் சிறப்பான முன்னேற்றத்தை பெறும்.

Navagraham

புதன் கிழமை தோறும் புதன் பகவான் வீற்றிருக்கும் கோவிலுக்கு சென்று பச்சை நிற தானியத்தை அல்லது பச்சை நிற தானியத்தால் செய்த நைவேத்தியத்தை பக்தர்களுக்குத் தானமாக கொடுப்பதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். பண தடை மற்றும் வருமான தடை இருப்பவர்கள் இது போல பரிகாரங்கள் செய்து பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே
கழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன? இதை மட்டும் செய்தால் தீராத கடனும் தீர்ந்துவிடும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.