கீன்வா எனப்படும் கருப்புத் திணையின் பயன்கள்

Quinoa
- Advertisement -

கருப்புத் திணை
நம் உணவு முறைகளில் எத்தனையோ வகையான தானியங்களை பயன்படுத்தி இருந்தாலும், கருப்புத் திணை என்று அழைக்கப்படும் இந்த கீன்வாவில் உள்ள பயன்களானது ஏராளம். கீன்வா வகை தானியத்தில் கருப்பு கீன்வா, வெள்ளை கீன்வா, சிகப்பு கீன்வா என்று மூன்று வகைகள் உள்ளது. இந்த கீன்வாவில் புரோட்டீன்கள், இரும்பு சத்துக்கள், வைட்டமின்கள், காப்பர், மெக்னீசியம், ஆல்ஃபா லினோலெனிக் அமிலம், போன்ற சத்துக்கள் ஏராளமாக அடங்கி உள்ளது. இதில் எந்த வகையான கீன்வாவை நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அதில் கிடைக்கும் நன்மைகளானது அதிகம்தான். இதன் மூலம் நமக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பற்றி சற்று விரிவாகக் காண்போமா.

 Quinoa

உடல் எடையை குறைக்க
மற்ற தானிய வகைகளில் இருக்கும் நார்ச்சத்தை விட கீன்வாவில் நார்ச்சத்தானது அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த நார்ச்சத்தானது எளிதில் கரையாத தன்மையை கொண்டது. ஒரு கப் கீன்வாவில் 2.5 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து மட்டுமே உள்ளது. இது நம் உடலின் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது. இந்த கீன்வா நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கொழுப்புச் சத்துக்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாக உள்ளது.

- Advertisement -

எலும்புகள் வலுவாக இருக்க
இந்த காலகட்டத்தில் 30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் எலும்புகள் தேய்மானமாகி விடுகிறது. மூட்டு வலி வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த கீன்வா வகை தானியத்தில் மெக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் நம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இது உதவி செய்கிறது.

 Quinoa

இதயத்தை பாதுகாக்க
கீன்வாவில் உள்ள நார்ச்சத்தானது கல்லீரலை தூண்டி, நம் உடலில் இருக்கும் இரத்தத்திலிருந்து கொழுப்பை பிரித்தெடுக்கிறது. இதனால் நம் இதயத்திற்கு செல்லப்படும் ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைக்கப்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதன் மூலம் உங்களது இதயம் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுகிறது.

- Advertisement -

சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரும்
சிலருக்கு சிறு வயதிலேயே தோல் சுருக்கம் விழுந்து வயது முதிர்ந்தோர் போல காணப்படும். கீன்வா வகை தானியத்தில் வைட்டமின் ஏ சத்தானது அதிகமாக இருப்பதால் உங்களின் சருமமானது இளமையாக மாற்றப்படுகிறது. இந்தப் கீன்மாவை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.

 Quinoa

கீன்மாவை வேகவைத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும். 1/4  கப் சோயா பாலுடன் இந்த கீன்வா விழுதையும் சேர்த்து, 3 ஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவும்போது முகச்சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.

- Advertisement -

வீக்கத்தை நீக்க
இதிலிருக்கும் ஃபைபர் சத்தானது நம் உடம்பில் வீக்கம் உண்டாக்கும் மரபணுக்களை கட்டுப்படுத்துகிறது.

 Quinoa

புற்று நோயில் ஏற்படும் தாக்கத்தை குறைக்க
புற்று நோயினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த கீன்வா தானியத்தை ஒரு கப் அளவு சாப்பிட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. மனிதர்களுக்கு புற்றுநோயால் ஏற்படும் அகால மரணமானது இதன் மூலம் தடுக்கப்படுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு
நம் உடலின் புரதச் சத்தினை உருவாக்குவதற்கான அமினோ அமிலங்கள் இந்த தானியத்தில் அதிகமாக உள்ளது. இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. கீன்வாவில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் கிடைக்கிறது. இது நம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஊட்டச்சத்தாக பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் சத்தானது ரத்த நாளங்களை தளர்த்து ஒற்றைத் தலைவலி வர விடாமல் தடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Quinoa

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கீன்வாவில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நம் உடலிலின் செரிமான தன்மையை சீர்செய்கிறது. இதில் உள்ள ஃபைபர் சத்தானது செரிமான மண்டலத்தில் உள்ள திசுக்களை தூண்டுகிறது. இதன் மூலம் சிறுகுடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுகிறது. ஃபைபர் சத்தானது பெருங்குடலில் செயல்பட்டு மலச்சிக்கலையும் தடுக்கிறது.

இந்த கீன்வா வை சமைப்பதற்கு முன்பு நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்துவது நல்லது. இதில் கிருமித்தொற்று உண்டாக வாய்ப்பு உள்ளது.

இந்த கீன்வா வகை தானியத்தை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்னர் தண்ணீரை மாற்றவும். மீண்டும் மாற்றப்பட்ட தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏற்படும் நுரை தன்மையானது மறையும்வரை மீண்டும் மீண்டும் கழுவுவது நல்லது. இதன் மூலம் இதன் கசப்புத் தன்மை நீங்கும். பின்பு இதனை சமைத்து உண்பது ஆரோக்கியம் தரும்.

இதையும் படிக்கலாமே
உலர் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Quinoa benefits in Tamil. Quinoa uses in Tamil. Quinoa payangal in Tamil. Quinoa nanmaigal in Tamil. Karuppu thinai payangal.

- Advertisement -