ராகி தோசையை இப்படி செய்தால் 2 மடங்கு ஊட்டச்சத்தை அதிகமாக பெறலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் ரெசிபி.

ragi-dosai4
- Advertisement -

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் டயட்டில், உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சனையும் வராது. உடலில் இருக்கும் சத்துக்களும் குறையக் கூடாது. அதே சமயம் உடல் எடையையும் சீராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். ராகி தோசையை விதவிதமாக எத்தனையோ வகைகளில் சுட முடியும். ஆனால் இது ஒரு வித்தியாசமான முறை. அதேசமயம் மிக மிக சுலபமான முறையும் கூட. வாங்க மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

ragi-1

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு – 1 கப், கைக்குத்தல் அரிசி – 1 கப், உளுந்து – 1/2 கப், வெந்தயம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவி விட வேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இந்த எல்லாப் பொருட்களையும் ஒன்றாக 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஊற வைத்திருக்கும் இந்த எல்லா பொருட்களையும் நான்கு மணி நேரம் கழித்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை ஒரு பவுலில் ஊற்றி மூடி போட்டு 5 மணி நேரம் புளிக்க வைத்து விடுங்கள். உங்களுடைய வீட்டில் சூடு அதிகமாக இருக்கும் என்றால் 4 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் புளிக்க வைத்தால் கூட போதுமானது.

புளித்து வந்த இந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து எப்போதும்போல தோசைக்கல்லில் அரிசி மாவு தோசை ஊற்றுவது போலவே வார்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்து பரிமாறினால் சூப்பரான சத்துக்கள் நிறைந்த ராகி தோசை தயார்.

- Advertisement -

பாலிஷ் போடாத கைக்குத்தல் அரிசி தற்போது பெரும்பாலான கடைகளிலும் சுலபமாக கிடைக்கின்றது. சாதாரண அரிசியை பயன்படுத்துவதை விட, இந்த அரிசியை பயன்படுத்தி உணவினை சமைத்தால் அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் நல்லது.

ragi-dosai2

இந்த அரிசியில் சாதம் வடித்தும் சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ராகி தோசை சுட்டு விட்டு இதற்கு தோதாக சட்னி சாம்பார் எதை வேண்டுமென்றாலும் சைட் டிஷ் ஆக பரிமாறலாம். குழந்தைகளுக்கும் கூட இந்த உணவு மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது. மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -