ராகி சேமியா புட்டு செய்ய போறீங்களா? இனிப்பு மற்றும் காரம் 2 வகையிலும் இப்படி செஞ்சு பாருங்க செமயா இருக்கும்!

ragi-semiya1
- Advertisement -

ராகி சேமியா புட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு டிஷ். இது காரம் மற்றும் இனிப்பு என்று இரு வேறு வகைகளில் செய்யப்படுகிறது. எப்படி செய்தாலும் அதன் குணத்திலும், தன்மையிலும் மாறப் போவது இல்லை. ராகி என்றாலே ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக் கூடிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதில் எப்படி காரம் மற்றும் இனிப்பு வகை புட்டு முறையாக செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ragi-semiya

ராகி சேமியா இனிப்பு புட்டு எப்படி செய்வது?
ராகி சேமியா பாக்கெட்டை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் சுமார் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதில் சேமியாவை போட்டு 5 நிமிடம் ஊற வையுங்கள். 5 நிமிடத்திற்கு மேல் ஊறினால் ராகி கொழகொழவென்று ஒட்டிக் கொள்ளும். எனவே ஐந்து நிமிடம் ஊறிய பின்பு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி உலர வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து அவிக்க வேண்டும்.

- Advertisement -

சரியாக ஏழு நிமிடம் அவித்தால் போதும், நன்றாக உதிரி உதிரியாக வெந்து வந்திருக்கும். அதனை ஆற வைத்து உதிர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு வருமாறு தேங்காயை நன்கு பூப்பூவாக துருவி எடுத்து கொள்ளுங்கள். அதனை ராகி சேமியா உடன் சேர்த்து. நான்கு ஏலக்காய்களை பொடிப் பொடியாக்கி தூவி கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு பிடித்த சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பரிமாற வேண்டியது தான்.

ragi-semiya-puttu

ராகி சேமியா காரப் புட்டு எப்படி செய்வது?
மேலே கூறியபடி ராகி சேமியாவை உப்பு தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வடிகட்டி இட்லி பாத்திரத்தில் அவித்து ஆற வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். பின்னர் கால் டீஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு பொரிந்து வந்ததும் அதில் அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். அவை பொன்னிறமாக வதங்கியதும் 2 காய்ந்த மிளகாய் மற்றும் இரண்டு சிறிய அளவிலான பச்சை மிளகாய்களை இரண்டாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி போட்டு கொள்ளுங்கள்.

ragi-semiya-puttu1

அதன் பிறகு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது உதிர்த்து வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி பின்னர் இறக்கி கொத்த மல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கி தூவி பரிமாற வேண்டியது தான். ராசி உடலுக்கு நன்மை செய்யக் கூடியதால் அடிக்கடி இந்த உணவை எடுத்து கொண்டால் நல்லது. மேலும் உடல் எடை குறையவும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -