ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க வழிபாடு

raghu dosham
- Advertisement -

எந்த அளவுக்கு கெடுதல் செய்பவர் ராகு என்று நினைக்கிறோமோ அந்த அளவிற்கு அவர் நன்மையும் செய்வார். அப்படிப்பட்ட தன்மை கொண்ட ராகுவின் காலம் ஒருவருடைய ஜாதகத்தில் நடக்கும் பொழுது பல இன்னல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் ராகு எந்த கிரகத்தை பார்க்கிறாரோ அதைப் பொறுத்து ராகுவின் பாதிப்புகள் ஏற்படும். இப்படி பாதிப்புகள் ஏற்பட்ட நபர்கள் ராகுவை சாந்தி செய்வதற்காக என்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ராகு தோஷம் இருப்பவர்களும் சரி, ராகு புத்தி நடப்பவர்களுக்கும் சரி, ராகு திசை நடப்பவர்களுக்கும் சரி, ராகுவின் பார்வையால் பாதிக்கப்பட்டவர்களும் சரி ராகு தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு ராகுவால் ஏற்பட்ட தீமைகள் விலகுவதற்கு இந்த விஷயங்களை தங்கள் நினைவில் நிறுத்திக் கொண்டு செயலாற்றினால் அவர்கள் வாழ்வில் பல நன்மைகளை அவர்களால் பெற முடியும்.

- Advertisement -

ராகு பகவான் எந்த அளவுக்கு கெடுதல் பலன்களை தருகிறாரோ அதே அளவிற்கு பல நல்ல பலன்களையும் தரக்கூடியவராகவே திகழ்கிறார். அதனால் தான் ராகு பகவானை வாரி வழங்குபவர் என்று ஜோதிடத்தில் கூறுகிறார்கள். கெடுதல் பலன்களை எப்படி வாரி வழங்குவுரோ அதேபோல் நல்ல பலன்களையும் வாரி வழங்குபவர். அவருடைய சூட்சுமமான பரிகாரங்களை நாம் செய்யும் பொழுது கெடுதல் பலன்கள் அனைத்தையும் மாற்றி நன்மையான பலன்களை வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது அந்த சூட்சுமமான வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்

பொதுவாக ராகு திசை, ராகு புத்தி நடப்பவர்கள் தாங்கள் பிறந்த கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மன் இருக்கும் ஆலயத்திற்கு சென்று துர்க்கை அம்மனை வழிபட்டு வருவதன் மூலம் பல நன்மைகளை அவர்களால் பெற முடியும். அதிலும் குறிப்பாக ராகு காலத்தில் வரும் கடைசி அரை மணி நேரத்தை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு.

- Advertisement -

ராகு காலத்தில் கடைசி அரை மணி நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு இரண்டு அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை சுபிக்சமாக இருக்கும். தங்களால் இயலும் பட்சத்தில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்தும் வழிபடலாம்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடக்கக்கூடிய ராகு காலத்தில் ராகு கால பூஜையில் முழுமையாக கலந்து கொண்டு வழிபாடு செய்வதன் மூலமும் ராகு தோஷத்தின் இருந்து விடுபட முடியும். மேலும் அவர்கள் பிறந்த அந்த கிழமை அன்று மாமிசம் உண்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். அதேபோல் துக்க காரியங்களில் கலந்து கொள்வதையும் தவிர்ப்பது மிகவும் நன்மையை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனை வசியம் செய்ய சர்க்கரை பரிகாரம்
மிகவும் சக்தி வாய்ந்த சூட்சுமமான இந்த வழிமுறைகளை பின்பற்றி ராகுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு நன்மைகளை பெறலாம்.

- Advertisement -