குரு பெயர்ச்சி பரிகாரம்

Guru baghavan
- Advertisement -

ஒன்பது கிரகங்களில் “வியாழன், பொன்னன்” என்று அழைக்கப்படும் “குரு கிரகம்” மட்டுமே முழுமையான சுபகிரகம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் பிற கிரகங்கள் எந்த நிலையிலிருந்தாலும், குரு கிரகம் மட்டும் நல்ல நிலையிலிருந்தால், மீதி கிரகங்களின் தசா காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். 12 ராசிகளிலும் வருடத்திற்கு ஒரு முறை குரு பகவான் பெயர்ச்சி அடைவதை “குரு பெயர்ச்சி” என அழைக்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நற்பலன்களை பெறுவதற்கு “குரு பெயர்ச்சி பரிகாரங்கள்” குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

guru bagwan

குரு பெயர்ச்சி பரிகாரம்

குருபெயர்ச்சி தினத்தன்று உங்களுக்கு அருகாமையிலுள்ள கோவில்களில் நடக்கும் குருபெயர்ச்சி பூஜைகள், யாகங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு உங்கள் ராசி மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ராசி, நட்சத்திரம் போன்றவற்றிற்கு சேர்த்து அர்ச்சனை செய்து, குருபகவானை வழிபடுவது நல்லது. குரு பெயர்ச்சி தினத்தன்று காலையில் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து, குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து, வழிபட்ட பின்பு விரதத்தை முடித்து உணவருந்துவது குரு பகவானின் அருளை பெற்று தரும்.

- Advertisement -

குருபெயர்ச்சி தினத்தன்று 27 அல்லது 108 வெள்ளை கொண்டைக்கடலைகளை மஞ்சள் நிற நூலில் மாலையாக கோர்த்து, அக்கொண்டைக்கடலை மாலையை நவகிரகங்களில் குரு பகவானுக்கு அணிவித்து, மஞ்சள் நிற பூக்கள் குருபகவானின் பாதங்களில் சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்புகளை அவருக்கு படைத்து வழிபட்ட பின்பு அந்த இனிப்புகளை கோவிலுள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

guru

குரு பெயர்ச்சியால் சற்று பாதகமான பலன்களை பெறக்கூடிய நிலையில் இருக்கும் ராசியினர், அடுத்த குரு பெயர்ச்சி ஏற்படும் வரை வியாழக்கிழமைகளில் முடிந்த வரை மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வருவது குரு பகவானால் பாதக பலன்கள் ஏற்படாமல் தடுக்கும். குரு பகவானின் வாகனம் யானை ஆகும். கோவில் யானைக்கு அவ்வப்போது பழங்களை உணவாக கொடுத்து வருவது குரு பகவானின் அருளை பெற்று தரும். குரு தோஷத்தையும் போக்கும்.

- Advertisement -

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இதையும் படிக்கலாமே:
மேஷ ராசிக் காரர்கள் யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Guru peyarchi pariharam in Tamil. We can alos say it as Guru peyarchi 2018 Pariharam in Tamil or  Guru peyarchi 2018 to 2019 pariharam in Tamil.

- Advertisement -