இந்த இட்லியை அடிக்கடி சாப்பிட்டாலே எலும்பு தேய்மானம் வராது. அடிக்கடி முதுகு வலியால் பெண்கள் அவதிப்பட வேண்டாம்.

ragi-idli-maavu
- Advertisement -

கேழ்வரகு கூழ் செய்து சாப்பிடுங்கள். கலி செய்து சாப்பிடுங்கள், என்றால் கட்டாயமாக இன்றைய சூழ்நிலையில் அது முடியவே முடியாத காரியம் ஆகிவிட்டது. சரி கேழ்வரகு மாவை வாங்கி ஏதாவது தோசை சுட்டு சாப்பிடலாம் என்று பார்த்தால் அதுவும் முடியவில்லை. நல்ல கேழ்வரகாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சத்தை அப்படியே முழுமையாக நாம் பெற வேண்டும் என்றால், கேழ்வரகை நாமே, நம் வீட்டில் அரைத்து இட்லி சுட்டு சாப்பிடலாம். சாஃப்டான ஸ்பாஞ்சியான கேழ்வரகு இட்லி எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கேழ்வரகு – 1 கப், உளுந்து – 1/2 கப், இட்லி அரிசி – 1/2 கப், வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக மூன்று அல்லது நான்கு முறை கழுவி விட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

5 மணி நேரம் இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஊறட்டும். அதன் பின்பு மிக்ஸியில் அல்லது கிரைண்டரிலோ இந்த மாவை போட்டு இட்லி மாவு போலவே அரைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு உப்பு போட்டு உங்கள் கையை கொண்டு கரைத்து மூடி போட்டு 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். புளித்த பின்பு, மாவு பொங்கி இட்லி மாவு பதத்திற்கு வரும். நன்றாக அடித்து கலக்கி விட்டு இதை இட்லி தட்டில் இட்லி வார்க்க வேண்டியதுதான்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி முதலில் நன்றாக கொதிக்க வையுங்கள். அதன் பின்பு இட்லி தட்டை இட்லி பானையில் அடுக்கி விட்டு மூடி போட்டு 15 நிமிடங்கள் இந்த இட்லியை வேக வைத்து எடுக்க வேண்டும். (அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வையுங்கள்.) சாதாரண இட்லி ஏழு நிமிடத்தில் வெந்துவிடும். ஆனால் இந்த இட்லி வேகுவதற்கு 15 நிமிடங்கள் கட்டாயம் எடுக்கும். நன்றாக வேக வைத்து தான் இந்த இட்லியை சாப்பிட வேண்டும். கேழ்வரகு மாவை வேகாமல் சாப்பிட்டால் வயிறு கோளாறு ஏற்படும்.

- Advertisement -

இட்லி வெந்ததும் தட்டை வெளியே எடுத்து கொஞ்சம் சூடு ஆறியதும் ஒரு ஸ்பூனில் தண்ணீர் தொட்டு இந்த இட்லியை லேசாக எடுத்தால் சூப்பராக நமக்கு கிடைத்துவிடும். சுட சுட இட்லிக்கு சட்னி சாம்பார் உங்கள் விருப்பம் போல சைட் டிஷ் வைத்து பரிமாறலாம். கூடுமானவரை இந்த இட்லியை காலை நேரத்தில் பிரேக்ஃபாஸ்ட்க்கு எடுத்துக் கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாள் இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் கூட உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும். ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.

பின்குறிப்பு: இதே மாவை பயன்படுத்தி நீங்கள் தோசை கூட வார்த்து சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இந்த மாவையே தோசை கல்லில் மெல்லிசாக தீட்டி எண்ணெய் ஊற்றி மொறு மொறுவென சிவக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -