10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு பத்தாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

rahu

ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் வீடு என்பது மூதாதையர்களின் சொத்துக்கள், கௌரவம், சபைகளில் முக்கியத்துவம், அரசியல் செல்வாக்கு இவற்றையெல்லாம் குறிக்கும். சொந்தத் தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு இவைகளும் இதைக்கொண்டு தான் நிர்ணயிக்கப்படுகிறது.

பத்தாம் வீட்டில் ராகுவை கொண்டவர்களுக்கு, தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள தேவையான பணம் எந்த ரூபத்திலாவது வந்து சேர்ந்துவிடும். பணப் பற்றாக்குறை உள்ளது என்ற வருத்தமே இவர்களுக்கு வராது. இதுமட்டுமல்லாமல் உங்களின் பூர்வீக சொத்தில் உங்களுக்கு கிடைக்கப்படும் வருமானமானது அதிக அளவில் கிடைக்கும். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அதில் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் அதிக ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பீர்கள்.

Rahu mantra

கூடுமானவரை நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக தான் இருப்பீர்கள். அதில் அதிக ஈடுபாடுடனும் செயல்பட்டு அதிக லாபத்தையும் நீங்கள் அடைவீர்கள்.  மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து, நீங்கள் தொழில் செய்து வந்தால், அது உங்களுக்கு மேலும் பல வெற்றியை தருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. உங்களின் தொழிலுக்காக நீங்கள் மற்றவர்களை அணுகும் விதமானது மிகவும் சிறப்பாகவே இருக்கும். உங்களின் நட்பு வட்டாரமானது மிகவும் பெரியதாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக உங்கள் நண்பர்கள் இருப்பார்கள். பத்தில் ராகுவை கொண்டவர்கள் தங்கள் தொழிலை நினைத்து காணும் பெரிய கனவானது நிச்சயமாக நிறைவேறிவிடும். குறுகிய காலத்தில் நிறைய வெற்றியை பெறுபவர்களாக செயல்படுவார்கள்.

- Advertisement -

நீங்கள் அரசியலில் சிறந்து விளங்கி மக்களிடையே நல்லபெயர் வாங்குவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

Rahu Ketu

இவர்களில் சிலர் மந்திர தந்திர வித்தைகளை கற்றவர்களாகவும் இருப்பார்கள். சிலர் விஷ பூச்சிகள் கடித்ததற்கு மருந்து தரும் வைத்தியராகவும் இருக்கலாம். பத்தில் ராகுவுடன் சேர்ந்து சந்திரன் இருந்தால் உங்களுக்கு ராஜ யோகம் தான்.

பத்தில் ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள்
இவர்களுக்கு மனைவியாலும், மனைவி சம்பந்தப்பட்ட உறவுகளினாலும் கிடைக்கும் பலனானது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். கணவன் மனைவி இடையே உள்ள நெருக்கமும் மிகவும் குறைவாகத்தான் காணப்படும்.

rahu

நீங்கள் மிகவும் சுயநலவாதியாகவும் இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தொழிலில் லாபத்தை அடைவதற்கு, சில சுயநல யோசனைகளை கொண்டு குறுக்கு வழியில் கூட சிந்திப்பீர்கள். ஒரு வேலையை உங்களிடத்தில் கொடுத்தால் அதை விரைவாக செய்து முடிக்க மாட்டீர்கள். அதைப்பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பார்களே தவிர, வேலையில் ஒன்றும் சுறுசுறுப்பு இருக்காது. இதனால் சில பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் தாமதம் தோல்வி, உண்டாக சில வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் பேச்சினை தவிர்த்து, உங்கள் வேகத்தினை செயல்பாட்டில் அதிகரிப்பது நல்லது.

பரிகாரம்
பிரதோஷ காலங்களில் சிவனை நினைத்து வழிபடுவது நன்மையை தரும். அம்மன் கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதன் மூலம் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குலதெய்வத்தை மறக்காமல் வழிபடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே
9ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 10th house in Tamil. 10 il Rahu palan. Rahu in tenth house effects remedies in Tamil.