9ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு ஒன்பதாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

Rahu Ketu

ஒருவருடைய ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு என்பது உங்களுடைய தந்தையின் நிலை, உங்களின் பயணம், உயர்கல்வி, ஆன்மீகம் இவற்றை குறிக்கிறது.

ஒன்பதில் ராகு உள்ளவர்கள் ஞாபகசக்தி உடையவர்களாகவும், தன் கையில் எடுத்துக் கொள்ளும் காரியத்தை சிறப்பாக முடிப்பவர்களாகவும் இருப்பார்கள். உங்களிடம் போட்டிக்காக வருபவர்கள் உங்களை மிஞ்ச முடியாது. உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களும் தோற்று தான் போவார்கள். அவ்வளவு திறமை உடையவர்களாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடத்தில் அதிக பாசம் வைத்திருப்பீர்கள். உங்களுக்கு மத ஈடுபாடு அதிகமாக இருக்கும். ஜாதி சம்பந்தப்பட்ட மாநாடு, மத வழிபாடு, சாதி மத போராட்டம் இவைகளில் எல்லாம் நீங்களாகவே முன்சென்று கலந்து கொள்வீர்கள். கலப்பு திருமணம் செய்து கொள்வது என்பதெல்லாம் உங்களுக்கு பிடிக்காது. காதலுக்கும் எதிரியாகத் தான் இருப்பீர்கள். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உங்களிடம் அதிகமாகவே இருக்கும்.

rahu

ஆன்மிகத்தில் அதிகமான ஈடுபாடு கொண்ட நீங்கள் நீண்ட தூரம் புண்ணிய பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. அந்தக் கடவுளின் ஆசியும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்களின் பெற்றோர்களை நீங்கள் பாசமாக பார்த்துக் கொள்வீர்கள். நீங்கள் அதிகப்படியான கல்வியை படித்து அறிவாளியாகவும் இருக்கலாம், அல்லது அனுபவ ரீதியான படிப்பைப் படித்து புத்திசாலித்தனமாக செயல்படுபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் வெளிநாட்டிற்கு மேல்படிப்பு படிப்பதாகவும் செல்லலாம். வெளிநாட்டிலேயே வேலைவாய்ப்பு கிடைத்து அங்கேயே தங்கும் சூழ்நிலையும் உண்டாகும். வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் செல்வதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

9ல் ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள்
நீங்கள் பிறந்ததற்கு பின்பு உங்கள் தந்தையின் வளர்ச்சியில் சிறிது இறக்கம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. ஒன்பதில் ராகு உள்ளவர்கள் அடுத்தவர்களின் குறைகளை தேடி கண்டுபிடித்து குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் சூதாட்டத்திற்கு சுலபமாக அடிமையாகி விடுவீர்கள். பந்தயம் கட்டுவது, சூதாடுவது, ஷேர் மார்க்கெட் போன்ற பழக்கங்களுக்கு செல்லாமல் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம். இப்படிப்பட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டால் அதிகமான பண இழப்பு ஏற்பட்டு விடும். நீங்கள் நல்லவராக தான் இருப்பீர்கள், ஆனால் உங்களுக்கு ஒருவரைப்பற்றி மற்றவரிடம் புறம் பேசும் புத்தி இருப்பதால் மற்றவர் கண்களுக்கு கெட்டவர்களாக தெரிவீர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், எது நல்லது, எது கெட்டது, என்பதை தீர்மானித்து விட்டு செயல்படுவது நல்லது. நீங்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு பெரிதாக முன்னேற்றம் எதுவும் அமையாது. சுப கிரகங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஜாதகக்காரர்கள் சிலருக்குத் தன் மனைவியிடம் அடங்கிப் போகும் சூழ்நிலையும் ஏற்படும்.

rahu 1

பரிகாரம்
ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று 10 நிமிடம் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம். குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

இதையும் படிக்கலாமே
8ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 9th house in Tamil. 9 il Rahu palan. Rahu in ninth house effects remedies in Tamil.