11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு பதினோராம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

Rahu mantra

ஒருவருடைய ஜாதகத்தில் பதினோராம் வீடு என்பது அவருடைய வாழ்க்கையில் லாப ஸ்தானத்தை குறிக்கின்றது. ஒருவருக்கு வியாபாரத்தில் ஏற்படக்கூடிய லாபத்தையும், வாழ்வில் ஏற்படக்கூடிய சுகங்களையும் இந்த பதினோராம் வீட்டை வைத்து தான் நிர்ணயிக்க முடியும். உங்களின் மூத்த சகோதரரைப் பற்றி இந்த வீட்டை வைத்து கூறலாம். உங்களின் நண்பர்களை நிர்ணயிப்பதும் இந்த 11ஆம் வீடுதான்.

பதினோராம் வீட்டில் ராகுவை கொண்டவர்கள் பொதுவாக பிரபலமானவர்களாக இருப்பார்கள். நீங்கள் வசித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஊரில் உங்களைப் பற்றி விசாரித்தால் உங்களை, தெரியாது என்று யாரும் கூற மாட்டார்கள். அந்த அளவிற்கு நீங்கள் உங்களுக்கும் உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் உதவி செய்தவராக இருப்பீர்கள். சூழ்நிலை காரணமாக உங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றவறாக இருந்தாலும் கூட, உங்கள் சொந்த ஊரில் வசிப்பவர்கள் உங்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்கள். உங்கள் ஊரில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் தலைவர்களுக்கு நீங்கள் மிகவும் நெருக்கமானவராக தான் இருப்பீர்கள். இதேபோன்று அரசாங்கத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் உங்களுக்கு சுலபமாக நண்பர்களாகி விடுவார்கள்.

rahu

நீங்கள் விவசாயம் செய்வதில் அக்கறை காட்டினால் அதிகமான லாபம் கிடைக்கும். பால் சம்பந்தப்பட்ட தொழில் செய்தாலும் நல்ல பலன் கொடுக்கும். சொந்த வீடு வாகனம் வைத்துள்ளவர்களாகதான் இருப்பீர்கள். சிலருக்கு வாழ்க்கையின் ஆரம்ப காலமானது கஷ்டமாக இருந்தாலும், பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டமானது வந்து உங்களை புகழின் உச்சியில் அமர்ந்தி விடும்.

- Advertisement -

உங்கள் வாழ்க்கையானது, உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் அளவிற்கு சிறப்பான வாழ்க்கையாக தான் அமைந்திருக்கும். பரம்பரை பரம்பரையாகவே மிகுந்த செல்வாக்குப் படைத்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். அப்படி இல்லை என்றாலும் உங்களுக்கு வரப்போகும் மனைவியின் மூலம் அதிக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

rahu

11இல் ராகுவால் ஏற்படும் பிரச்சினைகள்
உங்களுக்கு மூத்த சகோதரர் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுடன் உங்களுக்கு சுமுகமான உறவானது ஏற்படாது. மூத்த சகோதரருக்கும் உங்களுக்கும் இடையே ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். மூத்த சகோதரரை தவிர மற்ற உறவுகளுக்கிடையே சுமூகமான உறவானது உங்களுக்கு ஏற்படும்.

நீங்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் கணக்கு வழக்குகளை பார்ப்பதில் அதிக அக்கறை காட்ட மாட்டீர்கள். இதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது உங்கள் பங்குதாரர்களிடம் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உங்கள் தொழிலை நீங்கள் தனித்து செயல்படுவது தான் நல்லது. மற்றபடி பதினொன்றில் ராகு உங்களுக்கு நல்லதுதான் கொடுப்பார்.

rahu 1

பரிகாரம்
திங்கட்கிழமை தோறும் விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் உங்கள் தொழிலில் ஏற்படும் பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். குலதெய்வ வழிபாடு அவசியம்.

இதையும் படிக்கலாமே
10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 11th house in Tamil. 11 il Rahu palan. Rahu in eleventh house effects remedies in Tamil.