3ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு மூன்றாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

rahu

ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாம் வீடு என்பது அவருடைய சகோதரர்கள், அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், மன உறுதி இவற்றைக் குறிக்கும். நீங்கள் மிகவும் தைரியசாலியாக இருப்பீர்கள். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நிற்க்கும் சக்தி உடையவர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் மனதில் ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று நினைத்து விட்டால் உங்கள் இலக்கை அடையும் வரை அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டேதான் இருப்பீர்கள். எதிரிகள் உங்களுக்கு நிறைய பேர் இருக்கலாம். ஆனால் அவர்களால் உங்களை ஜெயிப்பது கஷ்டம்.

நீங்கள் கதை எழுதுபவர்களாகவோ, பத்திரிக்கையாளராகவோ, வானொலியில் தொகுப்பாளராகவோ, தொலைக்காட்சியில் பிரபலங்களாகவோ இருந்தால் அது உங்களுக்கு வெற்றிகரமான தொழிலாக அமையும். தகவல்தொடர்பு சம்பந்தப்பட்ட செயல்களில் நீங்கள் வெற்றி சிறந்து விளங்குவீர்கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் வலுவாக இருக்குமேயானால் பெண்களின் மூலம் நீங்கள் ஆதாயத்தை பெறுவீர்கள். உங்கள் மனைவியின் மூலமாக உங்களுக்கு நிறைய சொத்துக்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கான வாழ்க்கைத் துனைவி, குழந்தைகள், வீட்டில் செல்வம் இவை அனைத்தும் திருப்தி தரும் வகையில் அமையும்.

rahu

வெளிநாட்டில் உள்ள நண்பர்களுடன் நட்பு வைத்திருப்பீர்கள். இதனால் உங்களுக்கான ஆதாயங்கள் அதிகம் கிடைக்கும். உங்கள் வியாபாரத்தை திறமையான வழியில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வீர்கள். உங்கள் கையால் செய்யப்படும் முதலீட்டின் அளவு பல மடங்கு லாபமாக உங்களுக்கு கிடைக்கப்பெறும். உங்கள் தொழிலை விரிவு செய்ய வெளிநாட்டு பயணம் கூட மேற்கொள்வீர்கள். ஆனால், எவ்வளவுதான் பணம் வந்தாலும் நீங்கள் ஒருபோதும் திருப்தி அடைய மாட்டீர்கள். இதற்குக் காரணம் உங்கள் ஜாதகத்தில் ராகு மூன்றாம் இடத்தில் இருப்பது தான்.

- Advertisement -

மூன்றில் ராகுவால் பிரச்சனைகள்
உங்கள் மூத்த சகோதர, சகோதரிகள் இருந்தால் அவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு இளைய சகோதர, சகோதரிகள் இருந்தால் அவர்களின் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். உங்களது மனம் எப்பொழுதும் வித்தியாசமான யோசனைகளையும், அமைதியற்ற நிலையையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக உங்களுக்கு மன நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்கும். இது மாமனாருக்கும் பொருந்தும். நீங்கள் பழகும் உங்கள் நண்பர்கள், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தினர் இவர்களையெல்லாம் உங்களால் நம்ப முடியாத சூழல் ஏற்படும். உங்களுக்கு கால் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பஞ்சாயத்துகளில் தலையிடுவதன் மூலம் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பரிகாரங்கள்
தினமும் பசுவிற்கு உணவு அளித்து வணங்கி வரவேண்டும். வடக்கு அல்லது மேற்கு திசையில் தலைவைத்து தூங்கக் கூடாது. தினமும் காலையில் எழுந்தவுடன் துர்க்கை வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும். ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து வரலாம்.

இதையும் படிக்கலாமே
2ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன்கள் உண்டு. அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 3rd house in Tamil. 3 il Rahu palan. Rahu in third house effects remedies in Tamil.