2ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன்கள் உண்டு. அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கணத்திற்கு அடுத்தபடியாக உள்ள கட்டத்தை தான் இரண்டாம் இடம் என்று கூறுவோம். இந்த இரண்டாம் இடத்திற்குரிய சிறப்புகள் என்ன? இரண்டாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? இப்படி பலவற்றை இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம் வாருங்கள்.

rahu

ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாம் வீடு என்பது குடும்பம், உணவு பழக்கம், செல்வம், பேச்சு திறமை போன்றவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் ராகு இருந்தால் ஒருவருக்கு பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகப்படியான செல்வங்களை சேர்க்கும் ஒரு நிலை உண்டாகும். அதோடு செல்வம் மிக்க குடும்பத்தில் இருந்து ஒரு பெண் உங்களுக்கு மனைவியாக வருவார். உங்களுடைய மாமனார் வீட்டில் இருந்தும் உங்களுக்கு சொத்துக்கள் வர வாய்ப்புண்டு.

உணவு பழக்கத்தை பொறுத்தவரை சுவையான உணவையும், அதிலும் குறிப்பாக அசைவ உணவை நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்கள். சிலருக்கு மது பழக்கமும் இருக்க வாய்ப்புண்டு. நீங்கள் நல்ல பேச்சு திறமை கொண்டவராகவும், உங்களுடைய பேச்சால் மக்களை கவரும் வசீகரமும் உங்களிடம் இருக்கும். தாம்பத்யத்தை பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள். பேச்சில் வல்லவர்களாக இருக்கும் அரசியவாதிகள், பேச்சாளர்கள் போன்றோர் இரண்டில் ராகுவை கொண்டவர்களாக இருப்பது வழக்கம்.

Rahu Ketu

ராகுவால் ஏற்படும் சிக்கல்கள்:
ராகு இரண்டாவது வீட்டில் இருந்தாலும், மற்ற கிரகங்களின் நிலையை பொறுத்து அதன் பலன்கள் மாறும். அந்த வகையில் ராகு இரண்டாவது வீட்டில் இருந்து அது பாதகமான பலன்களை ஏற்படுத்தவும் அவரவர் ஜாதகத்தை பொறுத்து வாய்ப்புள்ளது. அது போன்ற சமயங்களில் உங்களுடைய வாழ்க்கை ஒரு ராட்டினத்தை போல மேலும் கீழும் அவ்வப்போது சென்றுகொண்டே இருக்கும். அதோடு தொண்டை சம்மந்தமான ஏதாவது ஒரு பிரச்சனை உங்களுக்கு அடிக்கடி வரக்கூடும்.

சில நேரங்களில் நீங்கள் அதிகப்படியான பொய்களை கூறவேண்டி இருக்கும். பணக்காரராக வாழும் நீங்கள் திடீரென ஏழையாகவும் மாறுவீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் வரும். அதன் மூலம் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். அதன் மூலம் நீங்கள் அதிகப்படியான பணத்தை இழக்க நேரிடும். ஆகையால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உங்களுக்கு வந்தால் அதை ஆரம்பக்கட்டத்திலேயே தவிர்த்து விடுவது நல்லது. இல்லையே பிரச்சனை உங்களை தேடி வருவது உறுதி.

rahu-ketu

சில நேரங்களில் ஆயுதங்கள் மூலமாகவும் உங்களுக்கு ஆபத்துக்கள் வர வாய்ப்புண்டு. அதே போல வீட்டில் களவு போகவும் வாய்ப்புண்டு. குரு உங்களுடைய ஜாதகத்தில் சாதகமான நிலையில் இருந்தால் உங்களுக்கான பல பிரச்சனைகள் தீரும். அதோடு உங்களுடைய வாழ்வின் முதல் பாதி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரங்கள் என்ன?
எப்போதும் குரு சம்மந்தமான சில பொருட்களை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு பொன்னிறத்தாலான அணிகளை அணிவது, மஞ்சள் நிற ஆடை அணிவது போன்றவற்றை செய்யலாம். அதோடு வீட்டில் உள்ள பெரியோர்களையும் தாய்மார்களையும் அன்போடு கவனித்துக்கொள்ளுதல் நல்லது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ராகு காயத்திரி மந்திரத்தை ஜபிக்கலாம்.