5ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு ஐந்தாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

Rahu in lagnam Tamil

ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு என்பது குழந்தை ஸ்தானத்தை குறிக்கிறது. இதற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒருவர் முன் ஜென்மத்தில் நன்மை செய்தவரா, இல்லை தீமை செய்தவரா என்பதை கண்டறிய இந்த ஐந்தாம் வீடானது பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா இல்லையா என்பதையும் இந்த ஐந்தாம் வீடு தான் முடிவு செய்யும்.

நீங்கள் தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது முதலில் தோல்வியடைந்து கடும் முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். உங்களின் முழுமையான கடின உழைப்பை செலுத்துவதன் மூலம் தான் வெற்றி கிடைக்கும் என்ற கட்டாயம் உங்களுக்கு உண்டு. உங்கள் நெருங்கிய சொந்த பந்தத்திற்கு அதிகமாக செலவு செய்யக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.

Rahu Ketu

நீங்கள் ஜோதிடத்தில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பீர்கள். ஜோதிடத்தை முழுமையாக கற்றுக்கொண்டு, ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சில பேருக்கு நீச்சலில் ஆர்வம் அதிகமாக இருக்கும். சிலர் ஓட்டப்பந்தய வீரர்களாக இருப்பார்கள். உங்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான ஆதாயத்தை பெறுவீர்கள்.

- Advertisement -

5 ல் ராகுவினால் ஏற்படும் பிரச்சனை
சிலர் குழந்தை பாக்கியமே இல்லை என்ற நிலையில் இருப்பார்கள். சிலர் ஆண் வாரிசு இல்லாத வர்களாக இருப்பார்கள். அதாவது உங்களின் கடைசி காலத்தில் இறுதிச்சடங்கை உங்கள் வம்ச ஆண்வாரிசுகள் செய்ய முடியாத நிலை இருக்கும். உங்களால் தத்து எடுக்கப்பட்ட ஆண் வாரிசுகளால் கூட உங்கள் இறுதிச்சடங்கானது நடக்கலாம். நீங்கள் எளிதில் தீய பழக்க வழக்கத்திற்கு அடிமையாகி விடுவீர்கள். குடிப்பழக்கம், புகைப்பிடித்தல், போதைப்பொருளுக்கு அடிமை இவை எல்லாமே இதில் அடங்கும். இந்த பழக்கவழக்கங்களில் அடிமையாகி விட்டால் உங்களால் எளிதில் வெளியில் வரமுடியாது.

rahu

உங்களது திருமண வாழ்க்கை சிறிது கடினமாக இருக்கும். சிலருக்கு இரண்டாவது திருமணம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. காதல் விவகாரங்களில் சிக்கிக் கொண்டால் அதிலும் பெரும் பிரச்சினைதான். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.  உங்களது ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். ராகுவுடன் சந்திரன் இணையும் போது பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பொதுவாக ஐந்தில் ராகு இருந்தால் இதயக் கோளாறு ஏற்படும். முன்னோர்களின் சாபம் கண்டிப்பாக இருக்கும். உங்களுக்கு பூர்வீக சொத்து ஏதேனும் இருந்தால் அதனை முழுமையாக இழப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பீர்கள் உங்கள் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

rahu

பரிகாரம்
உங்கள் முன்னோர்களுக்கு செய்துவரும் தர்ப்பணங்களை குறை இல்லாமல் தொடர்ந்து செய்து வர வேண்டும். குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். இதன் மூலம் ஐந்தில் ராகுவால் ஏற்படும் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
4ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 5th house in Tamil. 5 il Rahu palan. Rahu in fifth house effects remedies in Tamil.