4ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு நான்காம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

Rahu Kethu

ஒருவருடைய ஜாதகத்தில் நான்காம் வீடு என்பது இடம், நிலம், கட்டிடம், தாயாரின் உடல்நிலை, கல்வி, தொழில் இவையெல்லாம் நான்காம் இடத்தை குறிக்கும். பொதுவாக நான்கில் ராகு இருந்தால் நன்மைகளை விட தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும்.

உங்களின் தாயின் உடல் நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். நான்கில் உள்ள ராகு தாயின் உடல் நலனில் அதிக பாதிப்பினை ஏற்படுத்துவார். உங்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஏதாவது ஒரு இடம், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தாலே, அதில் வில்லங்கங்களும், பிரச்சினைகளும் வந்து கொண்டே இருக்கும். இதையெல்லாம் தாண்டி நீங்கள் அந்த இடத்தை வாங்கி விட்டாலும் கூட அதற்கான பஞ்சாயத்துக்கள் உங்களை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு ஏதாவது ஒரு பூர்வீக சொத்து இருந்து, அதனை பிரித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் அதில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.

rahu

கடனாக வாங்கப்பட்ட பணத்தை வைத்துதான் உங்களால் சொத்து வாங்க முடியும். கடனில் வாங்கிய சொத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து கடனை திருப்பித் தரும் சூழ்நிலை ஏற்படும். உங்களது வாழ்க்கையில் ரகசியங்கள் அடங்கி இருக்கும். சிலர் அரசாங்கத்திற்கு தெரியாத சில ரகசியமான தொழில்களை செய்து வருவீர்கள். அது சமூகத்திற்கு எதிரானதாக இருக்கும். தனக்கு மட்டும் நன்மை கிடைத்தால் போதும் என்ற நோக்கத்தோடு செயல்படுவார். ஒரு வேலையைத் தொடங்கி அதை முழுமையாக முடித்த பின்புதான் அடுத்த வேலை தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் பின்பற்ற மாட்டீர்கள். அரைகுறையாக எல்லா வேலையும் செய்து வருகிறீர்கள். மோசடி வழக்குகளில் மாட்டிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

rahu 1

உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படாது. ஏதாவது ஒரு வகையில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக உங்களின் தாய் வழியாக இருக்கும் உறவுகளிடம் இருந்து விலகியே இருப்பீர்கள். ஏதாவது ஒரு விதத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு மன அமைதி இல்லாமல், ஒருவிதமான சோகத்தை வைத்துக்கொண்டே வாழ்பவர்களாக இருப்பீர்கள்.

நான்கில் ராகுவினால் ஏற்படும் நன்மைகள்
நான்கில் ராகுவால் கல்வியில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் சிலருக்கு ஜாதகப்படி ராகு புதன் சேர்க்கை 4ஆம் இடத்தில் சேரும் பட்சத்தில், இவர்களுக்கு பத்தாம் இடமும் பலம் பெற்று இருந்தால் கல்வியிலும் தொழிலிலும் முன்னேற்றம் அடைவர். இவர்களுக்கு வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி படிக்கும் வாய்ப்புகள் உள்ளது. பெரிய முதலீடு செய்து தொழிலில் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள். இதுதவிர 4ல் ராகு உள்ளவர்களுக்கு நன்மைகள் ஏற்பட வேண்டுமென்றால் உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் என்ன கிரகம் இருக்கின்றது என்பதை வைத்துதான் நன்மைகளானது நடக்கும்.

Rahu Ketu

பரிகாரங்கள்
நீங்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வருவது நல்லது. அம்மனுக்கு வெள்ளை பட்டு வஸ்திரம் அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து வரவேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அம்மணி வழிபடுவதன் மூலம் மட்டும்தான் ராகுவின் தாக்கமானது குறையும்.

இதையும் படிக்கலாமே
3ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 4th house in Tamil. 4 il Rahu palan. Rahu in fourth house effects remedies in Tamil.