6ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு ஆறாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

Thirunageswaram temple

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் வீடு என்பது, கடன், வியாதி, உணவு பழக்கவழக்கம் வேலை இவற்றைக் குறிக்கும். உறவுகளில் தாய்மாமனை குறிப்பது ஆறாம் வீடு. ஜாதகத்தில் ராகு 3, 6 மற்றும் 11 இந்த இடத்தில் இருந்தால் நன்மையை தருவார்.

உங்களில் எதிரிகளால் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு நீங்கள் வெற்றியடைவீர்கள். உங்களை எதிர்த்து நின்றவர்களை அவ்வளவு எளிதில் சுலபமாக விட்டு விட மாட்டீர்கள். எதிரிகளை அழிக்காமல் ஓய மாட்டீர்கள்.  நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி முடித்த பின்புதான், அடுத்த வேலைக்கு செல்வீர்கள். அவ்வளவு பிடிவாத குணமும் உங்களிடம் உண்டு.

rahu 1

ஆரம்ப காலத்தில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்தித்து வந்திருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பகுதியில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். சொந்த தொழில் செய்வதில் திறமையாக விளங்குவீர்கள். உங்கள் தொழிலை ஆரம்பத்தில் மிக சிறிய அளவில் தொடங்கி இருப்பீர்கள். ஆனால் அது காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து பெரிய முன்னேற்றத்தை அடையும். உங்களின் துணைவி வசதி வாய்ப்பு உள்ள இடத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். மனைவியால் அதிகமான ஆதாயம் உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்கள் நண்பர்களினால் அதிக நன்மையே அடைவீர்கள்.

- Advertisement -

6ல் ராகுவினால் ஏற்படும் பிரச்சனைகள்
தவறான பெண்களிடம் சுலபமாக மாட்டிக்கொள்ளும் அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்துவிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். சில மூடநம்பிக்கைகளில் உங்களுக்கு பயம் இருக்கும். அதாவது காத்து, கருப்பு, பேய், பிசாசு, பூதம் என்று சொல்லிவிட்டால் அதை உடனே நம்பி விடுவீர்கள். ராகு திசையில் தோல் நோய், விஷ ஜந்துக்களினால் பாதிப்பு, காயங்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். மனநல பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. உங்களது தாய் வழி உறவுகளாலோ, தாய்மாமன் உறவுகளாலோ உங்களுக்கு எந்த வித மகிழ்ச்சியும் இருக்காது.

Rahu Ketu

ராகுவின் திசை நடக்கும் காலகட்டத்தில் தேவையில்லாத பிரச்சினைகளில் நீங்கள் தலையிட்டால் அது உங்களுக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்துவிடும். கண்களில் பார்ப்பதை எல்லாம் உண்ணும் பழக்கத்தினை கொண்ட நீங்கள், சாப்பிடுவதில் கட்டுப்பாடாக இருக்க மாட்டீர்கள். இதனால் உங்களுக்கு செரிமான பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். சிலருக்கு கடன் தொல்லை இருக்கும். இந்த கடனில் இருந்து தப்பிக்க சிலர் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள். எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அதில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். அதிலிருந்து தப்பிப்பதற்கான மார்க்கம் உங்களுக்கு தெரிந்து விடும். இதனால் பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்படாது. உங்கள் ஜாதகத்தில் 6ல் உள்ள ராகு அனைத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

rahu

பரிகாரம்
உங்களுக்கு வரும் சிறு சிறு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வாரம்தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே
5ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 6th house in Tamil. 6 il Rahu palan. Rahu in sixth house effects remedies in Tamil.