7ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு ஏழாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

rahu 1

ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் வீடு என்பது வியாபாரம், திருமணம், மரணம், பிரயாணம் இவற்றைக் குறிக்கும்.

ஏழாம் வீட்டில் ராகு இருந்தால் திருமணத்தில் தாமதம் ஏற்படும். பல கஷ்டங்களை தாண்டி திருமணம் நடந்து முடிந்தாலும் உங்கள் திருமண வாழ்க்கையானது சில சச்சரவுகளுடனே செல்லும். வாழ்க்கை துணையை விட்டு பிரிவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. கணவரின் ஜாதகத்தில் ராகு ஏழில் இருந்தால் மனைவியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார். ஆனால் இந்த ஜாதக காரர்களுக்கு அமையும் மனைவி கணவரின் நல்ல மனதை புரிந்துகொள்ள மாட்டார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டாவது வாழ்க்கையும் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. உங்களில் சிலருக்கு காதல் திருமணம் ஏற்படவும், கலப்பு திருமணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

Rahu mantra

கணவன், மனைவி இவர்கள் இருவருக்கு யார் ஜாதகத்தில் ஏழில் ராகு இருந்தாலும் அவர்கள் பணிந்து போவது நல்லது.

- Advertisement -

உங்களின் பூர்வீக சொத்தானது, உங்கள் கைகளில் இருந்து பறிபோக வாய்ப்பு உள்ளது. உங்கள் முன் கோபத்தினால் கூட, நீங்களே உங்கள் சொத்தை நிராகரித்து இருப்பீர்கள். நீங்கள் தொழிலை தனியாக செய்து வந்தால் எந்த பிரச்சினையும் வராது. ஆனால் பங்குதாரர்களிடம் சேர்ந்து செய்யப்படும் தொழிலாக இருந்தால் உங்கள் பங்குதாரர்களை நம்ப வேண்டாம்.  அவர்களால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எப்பொழுதும் ஒரு விதமான பதட்டத்தையும், பயத்தையும் உள்ளவர்களாக இருப்பீர்கள். ஏதாவது ஒரு சொத்தினை வாங்குவதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் அந்த முயற்சியானது ரிஜிஸ்ட்ரேஷன் வரை சென்று கூட தடங்கள் ஆகிவிடும். எந்த ஒரு ஒப்பந்தங்களை நம்பியும் கையெழுத்திட வேண்டாம். பண பரிமாற்றங்களில் கவனமாக இருப்பது நல்லது. ஏழில் ராகு உள்ளவர்களில் சிலர் ஒரே பாலின உறவை விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

rahu

7ல் ராகுவால் ஏற்படும் நன்மை
ஏழில் ராகு உள்ள ஜாதகத்தின் பூர்வீகம் பணக்காரராக இருக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் பூர்வீக சொத்தை வைத்து இவர்கள் பணக்காரர்களாக வாழலாம். பங்குதாரர்கள் இல்லாமல் சொந்த தொழில் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அரசாங்கத்திற்கும் உங்களுக்கும் ஒரு நல்ல உறவு இருக்கும். இவர்கள் முன்யோசனையுடன் செயல்படுவதில் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் முதலில் தோல்வி ஏற்பட்டாலும் உங்கள் விடா முயற்சியின் மூலம் அதனை வெற்றியாக மாற்றுவீர்கள். ஆனால் உங்களின் அனாவசிய பேச்சினை குறைத்துக்கொண்டு உங்களது முயற்சியில் ஈடுபட வேண்டும்.

rahu

பரிகாரம்
எந்த ஒரு காரியத்தை துவங்கும் முன்பும் விநாயகரை மனதில் நினைத்து கொள்ள வேண்டும். வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் விநாயகருக்கு விளக்கேற்றி வந்தால் காரியத்தடை நீங்கும். குலதெய்வ வழிபாடு அவசியம். உங்களால் முடிந்தவரை ஏழைப் பெண்ணிற்கு திருமணம் செய்ய உதவி செய்யுங்கல்.

இதையும் படிக்கலாமே
6ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 7th house in Tamil. 7 il Rahu palan. Rahu in seventh house effects remedies in Tamil.