8ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

rahu

ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு எட்டாம் இடத்தில் இருந்தால் அதற்குரிய நன்மைகள், தீமைகள் பற்றியும், அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் சற்று விரிவாக காண்போம்.

rahu

ஒருவருடைய ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஒருவரின் ஆயுளையும், அவர்களின் சொத்துக்களையும், உயில்களையும் குறிக்கும். ஒருவருக்கு ஏற்படும் மரணமானது இயற்கையானதா அல்லது துர்மரணம் என்பதை இந்த எட்டாம் வீட்டை வைத்துதான் நிர்ணயிப்பார்கள்.

எட்டில் ராகு இருந்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால் இந்த அதிர்ஷ்டத்தின் மூலம் உங்களைவிட உங்கள் உடன் இருப்பவர்களுக்குதான் லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அதிர்ஷ்டத்தினால் உங்களுக்கு கிடைக்கும் பலனை விட, உங்களின் கூட்டாளியாக இருந்தாலும், உங்களின் நண்பராக இருந்தாலும், உங்களின் உறவினர்களாக இருந்தாலும், உங்களுடன் இருப்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாக கிடைக்கும்.

rahu

எட்டில் ராகு உள்ளவர்களுக்கு திடீர் என்று எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது வாரிசுகள் இல்லாதவர்களின் சொத்து உங்களை வந்து சேரலாம். எதிர்பாராத அதிர்ஷ்டத்தினால் திடீர் பணவரவு வரலாம். எப்படி வந்தது என்று தெரியாது, ஆனால் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை அதிர்ஷ்டம் வந்து சேரும்.

- Advertisement -

எட்டில் ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள்
உங்களின் மன நிலைமையானது ஒரு நிலையாக இருக்காது. நீங்கள் கையில் எடுக்கும் செயலினை முழுமையாக முடிக்காமல், இதை செய்யலாமா அதை செய்யலாமா என்று மாற்றி மாற்றி யோசித்து கொண்டே இருப்பீர்கள். வலி, வேதனை, துக்கம், கண்ணீர் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். உங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்களாக நீங்கள் இருப்பீர்கள். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு வயிற்றுவலி, வயிறு எரிச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் வெளி இடங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

எட்டில் ராகு இருந்தால் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உடனே கிடைக்காது. மருத்துவரிடம் சென்று பல தடைகளைக் கடந்த பின்புதான் குழந்தைப்பேறு கிடைக்கும். உங்களுக்கு மாமியாராக இருப்பவருக்கு சில பிரச்சனைகள் உண்டாகும். மாமியார் உறவு உங்களுக்கு அமையும் என்பது கஷ்டம்தான். நீங்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. அப்படி போட வேண்டிய சூழ்நிலை வந்தாலும், எதற்காக ஜாமீன் கையெழுத்து போட்டீர்களோ, அதனை நீங்கள் தான் செய்ய வேண்டியதாகி விடும்.  உதாரணமாக பணத்திற்காக யாருக்காவது ஜாமின் கையெழுத்து போட்டு இருந்தால் அந்த பணத்தை நீங்கள் தான் கொடுப்பீர்கள்.

rahu 1

உங்கள் பொருட்களை நீங்கள் தான் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் பொருட்கள் அடிக்கடி திருடு போவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அலுவலக சம்பந்தப்பட்ட பொருட்களை நம்பி மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

இவர்கள் வண்டி வாகனங்கள் வேகமாக ஓட்டும் கார் ரேஸ், பைக் ரேஸ் இவைகளை விரும்புவார்களாக இருப்பார்கள். வண்டியை வேகமாக ஓட்டும் சமயங்களில் அதிக கவனம் தேவை. இதன் மூலம் இவர்களுக்கு பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

Rahu Ketu

பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரக்கூடிய அஷ்டமி திதியில், துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
7ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rahu in 8th house in Tamil. 8 il Rahu palan. Rahu in eighth house effects remedies in Tamil.