ராகு காலத்தில் வீட்டில் விளக்கேற்றலாமா?

vilakku
- Advertisement -

நாம் அனைவரும் செவ்வாய் கிழமை அன்று, ராகு காலத்தில்  கோவிலுக்கு சென்று எலுமிச்சை பழத்தில் விளக்கு போட்டு துர்க்கை அம்மனை வழிபடுவதை தான் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், சிலரின் வீடுகளுக்கு அருகாமையில் கோவில்கள் இல்லை. அவர்களால் கோவிலுக்கு சென்று ராகுகால சமயத்தில் விளக்கு ஏற்ற முடியாது என்ற சூழ்நிலை உடையவர்கள் வீட்டில் இந்த பூஜையை செய்யலாமா? என்று கேட்டால், கண்டிப்பாக இந்த ராகு கால பூஜையை வீட்டில் விளக்கு ஏற்றி செய்யக்கூடாது.

mavilakku

நாம் காலை அல்லது மாலை நேரத்தில் விளக்கை ஏற்றுகின்றோமோ இல்லையோ? ஆனால் வீட்டில் ராகு காலத்தில் கண்டிப்பாக விளக்கு ஏற்றக் கூடாது என்பது தான் சாஸ்திரம். வெள்ளிக்கிழமைகளில் நாம் இறைவனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளோம். வெள்ளிக்கிழமை அன்று 10.30 லிருந்து 12 மணி வரை ராகு காலம். இந்த ராகு காலம் வருவதற்கு முன்பே நாம் வெள்ளிக்கிழமை அன்று விளக்கினை ஏற்றி பூஜையை முடித்து விடவேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை 3 மணியிலிருந்து 4.30 மணி வரை ராகு காலமாகும். உங்களுக்கு இந்த ராகு காலத்தில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று காலையிலேயே விளக்கு ஏற்றி விட வேண்டும். நீங்கள் ஏற்றிய விளக்கை, எண்ணெய் ஊற்றி 3 மணி வரை அணையாமல் பார்த்துக் கொள்ளலாமே தவிர, செவ்வாய்க்கிழமை அன்று 3 மணிக்கு வீட்டில் நாம் விளக்கினை ஏற்ற கூடாது. விளக்கு ஏற்றுவதற்கு பதிலாக ராகுகால சமயத்தில் நீங்கள் துர்க்கை அம்மனை போற்றும் பாடல்களை பாடி துர்க்கையை வழிபடலாம்.

vilakku deepam

நாம் கோவிலுக்கு எடுத்து சென்று ஏற்றும் எலுமிச்சை பழத்தை கூட ராகு கால சமயத்திற்கு முன்பு வீட்டில் அறுத்து எடுத்து செல்லக்கூடாது. ராகு காலம் ஆரம்பித்த பிறகுதான், அதாவது மூன்று மணிக்கு மேல் தான் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்காக மாற்றவேண்டும். நாம் கோவிலுக்கு சென்ற பிறகே எலுமிச்சை பழத்தை விளக்காக மாற்றிக் கொள்வது சிறப்பானது. விளக்கு ஏற்றி முடித்ததும் அந்த எலுமிச்சை பழத்தினை திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. இந்த எலுமிச்சை பழச்சாறினை நாம் வீணாக்காமல் சமையலுக்கும் உபயோகிக்கலாம்.

- Advertisement -

deepam

துர்க்கைக்கு ஏற்றும் ராகுகால விளக்கினை ஆண்களும் ஏற்றலாம், பெண்களும் ஏற்றலாம். ஏனென்றால் ராகுகால பூஜை என்பது நமக்கு ஏற்படும் கஷ்டங்களை தவிர்ப்பதற்காகத்தான்.  இவற்றையெல்லாம் பின்பற்ற முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை மனதார நினைத்து, போற்றி, பூஜை செய்தாலே போதும் அதற்கான பலன் நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
சஷ்டி விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

English Overview:
Here we have Rahu kalam pooja details at home in Tamil.

- Advertisement -