கஷ்டம் தீர ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபத்தை ஏற்றும் போது இந்த தவறை செய்யாதீர்கள். இதனால் மேலும் மேலும் கஷ்டங்கள் தொடருமே தவிர குறையாது.

durgai amman vilaku elumichai dheepam
- Advertisement -

நமக்கு கஷ்டங்களை ஏற்படுத்தும் கிரகங்களும் ஒன்று தான் ராகு. ராகுவால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கு தான் ராகு கால பூஜையை நாம் செய்கிறோம். ஆனால் அந்த பூஜையை முறையாக எப்படி செய்வது என்று தெரியாமல் சிலர் அதில் தவறு செய்து அதற்கண பலனை பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அந்த வகையில் ராகு கால பூஜையை எப்படி செய்வது? எந்த கிழமையில் செய்தால் என்ன பலன் போன்றவற்றை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக ராகுகால பூஜை என்பது செவ்வாய்க்கிழமையில் வரும் ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமையில் வரும் ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு செய்யும் பூஜை ஆகும். நமக்கு ஒரு கஷ்டம் வருகிறது என்றால் முதலில் வருத்தப்படுபவள் நம்முடைய தாயே. அவ்வாறு இந்த உலகத்திற்கு தாயாக விளங்கும் அம்பிகை நம்முடைய துக்கங்களை தீர்ப்பவளாக, துக்க நிவாரணியாக திகழ்கிறாள். இந்த துர்க்கை அம்மனை ராகு காலத்தில் நாம் வழிபடுவதால் நமக்கு எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கின்றன.

- Advertisement -

ராகு கால பூஜை முறை:
ராகு கால வழிபாடு முறையில் முக்கிய பங்கு வகிப்பது எலுமிச்சை பழ தீபம் ஆகும். ஐந்து எலுமிச்சம் பழங்களை எடுத்து அதை பாதியாக நறுக்கி, அதில் இருக்கும் சாறை பிழிந்து அம்மனுக்கு அபிஷேகத்திற்காக வழங்கி விட வேண்டும். பிறகு அதிலிருந்து 9 எலுமிச்சை பழ தீபத்தை ஏற்ற வேண்டும். பொதுவாக தீபம் ஏற்றும் பொழுது நெய்யை ஊற்றி ஏற்றினால், அது மகாலட்சுமியை வசியம் செய்வதற்காக அமைகிறது. நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி ஏற்றும் பொழுது தான் நம்முடைய கஷ்டங்கள் விலகுவதற்கான பலனை தருகிறது.

பலரும் நெய்யை கொண்டு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது முற்றிலும் தவறான ஒரு செயல் இதனால் கஷ்டங்கள் ஒரு போதும் தீராது. நாம் ராகு காலத்தில் நம்முடைய கஷ்டங்கள் விலக வேண்டும் என்று நினைத்தால் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணையில் பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மேலும் செவ்வாய் கிழமை ராகு கால பூஜை நம்முடைய கஷ்டங்கள் விலகுவதற்கு துணை புரிகிறது.

- Advertisement -

வெள்ளி ராகு கால பூஜை நம்முடைய தன வசியத்திற்கு பயன்படுகிறது. ஆகையால் கஷ்டம் தீர வேண்டும் என்று எண்ணுபவர்கள் செவ்வாய்க்கிழமையில் வருகின்ற ராகு காலத்தில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு 9 எலுமிச்சை தீபங்களை ஏற்ற வேண்டும். மேலும் அம்மனுக்கு மாம்பழம், பலாப்பழம், வெண்பொங்கல் போன்ற மஞ்சள் சார்ந்த பொருட்களை நெய்வேத்தியமாக படைக்கலாம். இந்த ராகு காலத்தில் நாம் லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாரண அஷ்டகம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் போன்றவற்றை மனதார பாராயணம் செய்ய வேண்டும்.

பொதுவாக நாம் இந்த பூஜைகளை மேற்கொள்ளும்போது அருகில் இருப்பவர்களுடன் பேசிக் கொண்டு இருப்போம். அது முற்றிலும் தவறான செயலாகும். ராகு காலத்தில் நாம் என்ன உச்சரிக்கிறோமோ அதுவே நம்முடைய சங்கல்பம் ஆகிறது. மேலும் அதற்குரிய பலன்களே நமக்கு கிடைக்கும். ஆதலால் ராகு காலத்தில் அருகில் இருப்பவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை பேசாமல், அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுவும் கூட்டுப் பிரார்த்தனையாக இருந்தால், அதில் அம்மன் மன மகிழ்ச்சி அடைவதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -

ஒருவரின் ஜாதகத்தில் ராகுவால் பாதிப்பு ஏற்பட்டிருப்பின், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு சென்று, ஒன்பது எலுமிச்சை தீபங்களை ஏற்ற வேண்டும். மேலும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் இந்த ராகு காலத்தில் ஒன்பது எலுமிச்சை தீபங்களை ஏற்றி வழிபடுவதன் மூலம் ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

இதையும் படிக்கலாமே: வீட்டு வரவேற்பறையில் இந்த பொருள்கள் எல்லாம் இருந்தால் திடீர் அதிஷ்டங்கள் உண்டாகி, ராஜ யோக வாழ்க்கை உங்களை தேடி வரும்.

இந்த ராகு காலத்தில் நாம் பூஜை செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் போராட்டங்கள் நீங்கும். வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறையும், நோய் நொடிகள் அண்டாது. கடன்கள் விலகும், ஒரு ரூபாய் கடனாக இருப்பது கூட ஒரு லட்சம் ஆக மாறும் நிலையில் இருந்து வெளியில் வருவோம், விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படும், துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படி பல நன்மைகளை உள்ளடக்கியது ராகு கால் பூஜை.

- Advertisement -