ராகு திசையால் தீர்க்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் என்ன செய்ய வேண்டும்? ராகுவின் பிடியிலிருந்து தப்பிக்க பரிகாரங்கள் உண்டா?

rahu
- Advertisement -

முதலில் ராகு என்றாலே கஷ்டத்தை தருபவர் தான், என்ற எண்ணத்தை உங்களுடைய மனதில் இருந்து நீக்கி விடுங்கள். ராகுதிசையில் கஷ்டங்கள் மட்டுமல்ல, நல்லது நடக்கும் நேரமும் கட்டாயம் வரும். ராகு திசையால் தீராத கஷ்டங்களை அனுபவித்து வருபவர்கள், பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? ராகுவால் பிரச்சனைகள் வரப் போகின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? ராகுவின் பிடியில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களும் தப்பித்துக்கொள்ள தினம்தோறும் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

rahu

முதலில் எந்த ஒரு வீட்டில் உடைந்த பொருட்கள் இருக்கின்றதோ, அந்த வீட்டில் ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எவரொருவர் கிழிந்த துணியை அணிகிறாரோ அவருக்கு ராகுவினால் பிரச்சினைகள் ஏற்படும். உங்களுடைய வீட்டில் சுவற்றில் விரிசல் ஏற்படும். குறிப்பாக சொல்லப்போனால், வடகிழக்கு மூலையில் எவர் ஒருவர் வீட்டில் திடீரென விரிசல் விடுகிறதோ, அந்த வீட்டில் ராகுவின் ஆதிக்கம் தொடங்கி விட்டது என்று கூட சொல்லலாம். உங்கள் வீட்டில் இருக்கும் இந்த குறைகளை எல்லாம் இருந்தால் அதை தயவுசெய்து சரி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த ஒரு வீட்டில் சுபகாரியங்களை செய்ய முடியவில்லையோ, அந்த வீட்டில் ராகுவின் மூலம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது என்று அர்த்தம். சொல்லப்போனால் தினசரி தீபம் ஏற்றி கூட வழிபாடு செய்ய முடியாது. வெள்ளிக்கிழமை தினத்தில் வீட்டில் பூஜை செய்தாலும், சண்டை சச்சரவுகள் ஏற்படும். மன நிம்மதி கெடும். பொதுவாகவே தெய்வ வழிபாட்டை தடைப்படுத்தும் எந்த ஒரு செயலும் ராகுவால் தான் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் தடைகளைத் தாண்டி வழிபாடு செய்து விட்டோமேயானால், பிரச்சினைகள் குறையும். மன உளைச்சலில் வழிபாட்டை மட்டும் என்றும் தவற விட்டுவிடாதீர்கள்.

rahu

தேவையற்ற மன பயம் இருக்கும். வீட்டில் விஷ ஜந்துக்கள் நுழையும். குறிப்பிட்டு சொல்ல போனால் உங்களுடைய வீட்டில் பாம்பு வந்தால், ராகுவினால் பிரச்சினை உண்டு என்பதை உணர்த்தும் அறிகுறி. முடிந்தவரை உங்களுக்கு ராகுவால் பிரச்சனை இருக்கின்றது என்பதை உணர்ந்தாலும் அல்லது உங்கள் ஜாதகத்தைப் பார்த்து ராகு திசை உங்களுக்கு நடப்பதாக நீங்கள் தெரிந்து கொண்டிருந்தாலும், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நம்பிக்கையான தெய்வ வழிபாடு மட்டும் தான். எத்தனை தடங்கல்கள் எத்தனை இன்னல்கள் வந்தாலும், உங்களுடைய வீட்டில் தீபத்தை காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் ஏற்ற வேண்டும். தினம் தோறும் காலை, மாலை தீப தூப ஆராதனை செய்வது ராகுவினால் ஏற்படக்கூடிய பாதிப்பை நிச்சயம் குறைக்கும்.

- Advertisement -

பாம்பின் அம்சத்தை கொண்டிருக்கும் ராகுவிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், நம் வீட்டு வாசலில் கருடனின் திருவுருவப் படத்தை வைப்பது மிகவும் நல்லது. முடிந்தவரை உங்களுடைய வீட்டில் துளசி வழிபாடு செய்வது தீராத ராகு பிரச்சனைக்கு கூடிய விரைவில், விரைவில் ஒரு தீர்வை கொடுக்கும்.

thulasi

ராகுவினால் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது எனும் பட்சத்தில், முடிந்தால் ஒருமுறை திருவேற்காடு மாரியம்மன் கோவிலுக்கு சென்று, வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில், மாரியம்மனை அர்ச்சனை செய்து மனதார வழிபட்டால் பிரச்சினைகள் குறையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு தீராத மன உளைச்சல், கோபம், மன கஷ்டம், எதுவாக இருந்தாலும் அதை தீர்க்க ஒரு ஏலக்காய் போதும்! நிலை தடுமாறும் போது இப்படி செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -