காரசாரமான ரயில்வே சட்னியை இப்படித்தான் அரைக்கணுமா? இட்லிக்கு இதுதான் பெஸ்ட் சட்னி. 5 மணி நேரம் ஆனாலும் இந்த சட்னி கெட்டுப் போகாது.

railway-chutney
- Advertisement -

அது என்ன ரயில்வே சட்னி. ரயிலில் பயணம் செய்யும் போது இட்லிக்கு மேல் பச்சை நிறத்தில் காரசாரமாக ஒரு சட்னியை ஊற்றி வைத்திருப்பார்கள். சட்னியை இப்படி அரைத்தால் அது 6 லிருந்து 7 மணி நேரத்திற்கு கூட கெட்டுப்போகாது. அதாவது காலையிலேயே சீக்கிரமாக தயார் செய்த இட்லி சட்னியை 5 மணி நேரம் கழித்து ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு சாப்பிடக் கொடுத்தால் கூட, அந்த சட்னி கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் பொட்டுக்கடலையில் இந்தச் சட்னியை அரைத்து இட்லியின் மேல் ஊற்றி கொடுப்பார்களாம். அந்த சட்னி ரெசிபியை தான் இன்னைக்கு நாமும் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pottu-kadalai

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். பொட்டுக்கடலை 1 கப், துருவிய தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 6 லிருந்து 10, பூண்டுப்பல் – 3, இஞ்சி துருவல் – 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – 1/2 படி அளவு, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, தேவையான அளவு உப்பு, இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி முதலில் விழுதாக இந்தச் சட்னியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு அரைத்த சட்னியை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் இதில் இரண்டு அல்லது மூன்று பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி தண்ணீர் பதத்தில் தான் இருக்க வேண்டும். காரம் நாக்கில் வைத்தால் சுருக்கென்று இருக்க வேண்டும்.

இதில் தேங்காய் கட்டாயம் ஒரு டேபிள்ஸ்பூன் தான் சேர்க்க வேண்டும். 50 கிராம் பொட்டுக்கடலைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சரியாக இருக்கும். அதற்கு மேலே சேர்க்கக்கூடாது. அப்போதுதான் நீண்ட நேரத்திற்கு சட்னி கெட்டுப்போகாமல் இருக்கும்.

- Advertisement -

சரி, இந்த சட்னிக்கு ஒரு சூப்பரான தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். தாளிக்கும் போது கடுகு கறிவேப்பிலையை கொஞ்சம் அதிகமாகவே போட்டுக் கொள்ளுங்கள். இந்த தாளிப்பை சட்னியில் கொட்டி அப்படியே கலந்து விட வேண்டும். இரண்டு நிமிடங்கள் அப்படியே சட்டியை மூடி போட்டு விட்டு விடுங்கள்.

chutney

ஒரு தட்டில் நான்கு சுடச்சுட இட்லிகளை வைத்து, அதன்மேல் இந்த சட்னியை ஊற்றி ஊற வைத்து கையால் எடுத்து அப்படியே சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையாக இருக்கும். இட்லிக்கு பெஸ்ட் சட்னி இது தான் அப்படின்னு எல்லோருமே சொல்லுவாங்க. நிறைய பேருக்கு இந்த ரெசிபி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் இந்த முறையில், இந்த சட்னியை ஒருமுறை உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -