இந்த மழைக்காலத்திலும் உங்கள் வீட்டு கப்போர்டில் அடுக்கி வைத்திருக்கும் துணிகளும், மற்ற பொருட்கள் பூசனம் பிடிக்காமல் கமகமன்னு வாசத்தோடு இருக்க தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காக.

bad-smell
- Advertisement -

விடாமல் பெய்து கொண்டிருக்கும் மழையால் நம் வீட்டில் எப்போதுமே ஒரு கெட்ட வாடை வீசிக் கொண்டே இருக்கும். இரும்பு பீரோ, மரத்தினால் செய்யப்பட்ட பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் துணிமணிகள் கப்போர்டில் அடுக்கி வைத்திருக்கும் பொருட்கள் இவைகளில் ஈரப்பதம் தங்கி அதிலிருந்து ஒரு விதமான கெட்ட வாடை வீச தான் செய்யும். குறிப்பாக மர பீரோவில் ஈரப்பதம் படிந்து பூசனம் பிடிப்பதற்கு கூட நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இப்படி மழை காலத்தில் வீட்டில் வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பின் வரக்கூடிய சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும். மழைக்காலத்திலும் உங்கள் வீடு, உங்கள் வீட்டு கபோர்டு கமகம வாசத்தோடு இருக்கும். வாங்க அந்த குறிப்புகளை பார்க்கலாம்.

oothuvathi

Tip no 1:
பெரும்பாலும் நம் எல்லோரது வீட்டிலும் ஊதுபத்தி இருக்கும். அந்த ஊதுபத்தி கட்டாயமாக நறுமணம் நிறைந்த ஒரு பொருள். உங்கள் வீட்டில் துணிகள் அடுக்கி வைத்திருக்கும் பீரோ, கப்போர்டு இவைகளுக்கு இடையே இந்த ஊதுபத்தியை ஆங்காங்கே வைத்துக்கொள்ளலாம். அதே போல புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் கபோர்டிலும் இந்த உத்தியை வைக்கலாம். ஊதுபத்தி பொருத்தி வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அப்படியே ஒவ்வொரு ஊதுபத்தியை மூடி வைத்திருக்கும் கபோட் திறந்து வைத்திருக்கும் அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கும் பொருட்களுக்கு இடையே சொருகி வைத்தாலே போதும். அந்த இடம் கமகம வாசத்தோடு இருக்கும். இந்த ஊதுபத்தியின் நறுமணம் ஒரு மாதம் வரை நமக்கு இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை பழைய உருவத்தை களை எடுத்துவிட்டு புதிய உருவத்தைகளை வைக்க வேண்டும்.

- Advertisement -

Tip no 2:
நம்முடைய வீட்டில் இருக்கும் கப்போர்டில் பூசனம் பிடிப்பதற்காக கெட்டவாடை வீசுவதற்கு முதல் காரணம் அங்கு இருக்கும் ஈரத்தன்மை தான். அந்த ஈர தன்மையை முழுமையாக உறிஞ்சக் கூடிய சக்தி கரி துண்டு களுக்கு உண்டு. ஆங்கிலத்தில் இதை charcoal என்று சொல்வார்கள். துணிகளை ஐயன் செய்து தரக்கூடிய கடைகளில் இந்த கரித்துண்டுகள் நமக்கு சுலபமாக கிடைக்கும். அதை வாங்கி நம் வீட்டிற்கு கொண்டுவந்து டிஷ்யூ பேப்பரில் மடித்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு, இந்த கரித்துண்டுகளை அப்படியே பீரோவில் அலமாரிகளில் வைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் ஈரப்பதத்தை இந்த கரித்துண்டு உறிஞ்சிக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி செய்தால் கப்போர்டில் பூஞ்சை பிடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

kari-thundu

Tip no 3:
ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் ஆப்பசோடா இரண்டு ஸ்பூன் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் உங்கள் வீட்டில் இருக்கும் வாசனை நிறைந்த எசன்ஸ் ஸ்ப்ரே எதை வேண்டுமென்றாலும் சேர்த்து கலந்து இந்த பிளாஸ்டிக் டப்பாவுக்கு மேல் ஒரு மூடியை போட்டு, அந்த மூடியில் சிறிய ஓட்டைகளைப் போட்டு இந்தப் டப்பாவை அப்படியே பீரோவில் வைத்து விட்டால் போதும். பீரோ கமகமன்னு வாசத்தோடு இருக்கும். இந்த டப்பாவை சமையலறையில் சிங்க் அடியிலும் வைத்துக்கொள்ளலாம். குளியலறை கழிவறையிலும் வைத்துப் பயன்படுத்தலாம். அந்த இடங்களில் இருந்து கெட்ட வாடை வீசாது. தனித்தனியாக ஒவ்வொரு இடங்களுக்கு வைக்க ஒவ்வொரு டப்பாவை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

Tip no 4:
காலாவதியான அதாவது எக்ஸ்பயரி ஆன மாய்ஸ்சுரைசர், சென்ட் பாட்டில் ஸ்ப்ரே பாட்டில் கட்டாயமாக நம்முடைய வீடுகளில் இருக்கும். அதை வீணாக தூக்கிப் போட வேண்டாம். உங்க வீட்டில மரத்தினால் செய்யப்பட்ட கபோர்டு இருந்தால் அதில் ஆங்காங்கே இந்த மாய்ச்சுரைசரை போட்டு தடவி விடுங்கள். இப்படி செய்யும்போது உங்களுடைய கபோர்டு பளபளப்பாகவும் இருக்கும். அதே சமயம் அந்த கப்போர்டில் பூசனம் பிடிக்காமல் நல்ல வாசம் வீசும். ஸ்ப்ரே பாட்டில், சென்ட் இவைகளை பீரோவில் உள் பக்கத்திலும், வெளி பக்கத்திலும் ஸ்ப்ரே செய்து விட்டுவிடுங்கள்.

Tip no 5:
நம்ம வீட்ல குளிப்பதற்கு பயன்படுத்தும் வாசனை நிறைந்த சோப்பை லேசாக துருவிக் கொள்ள வேண்டும். துருவிய சோப்பை ஒரு மெல்லிசான காட்டன் துணியிலோ அல்லது டிஷ்யூ பேப்பரில் வைத்து மடித்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு இந்த குட்டி குட்டி பாக்கட்டை வீட்டில் கப்போர்டில் துணி மலைகளுக்கு இடையே ஆங்காங்கே வைத்து விட்டாலும் போதும். உங்கள் அலமாரிகள் எப்போதும் வாசமாக இருக்கும்.

soap

Tip no 6:
அடுத்தபடியாக வீட்டு சமையலறையிலும் கிராம்பு பட்டை ஏலக்காய் போன்ற வாசனை நிறைந்த பொருட்கள் இருக்கும் இந்த பொருட்களை இரண்டு அல்லது மூன்று என்ற கணக்கில் ஒரு டப்பாவில் நுனிக்கிப் போட்டாலும் சரி, அப்படியே முழுமையாக போட்டாலும் சரி, அது அவரவர் சௌகரியம். வாசனை நிறைந்த இந்த பொருட்களை போட்டு வைத்திருக்கும் டப்பாவில் திறந்தபடி அப்படியே கபோர்டில் வைத்து விட்டால் அந்த இடம் முழுவதும் நல்ல வாசத்தோடு இருக்கும்.

comfort

Tip no 7:
ஒரு சின்ன ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் கம்ஃபோர்ட் அல்லது உங்கள் வீட்டில் துணிகளை வாசமாக வைத்துக் கொள்ள பயன்படுத்தும் லிக்விட் எதுவாக இருந்தாலும் சரி, அதை ஊற்றிக்கொள்ள வேண்டும். இதோடு ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு இந்த ஸ்பிரேவை உங்கள் வீட்டில் துணிமணிகள் அடுக்கி வைத்திருக்கும் கப்போர்டில் ஸ்ப்ரே செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் வெள்ளை நிறத்தில் இருக்கும் துணிகள் பட்டுப்புடவைகள் இவைகளின் மேலே இந்த ஸ்ப்ரேவை நேரடியாக அடிக்க கூடாது. என்பதும் குறிப்பிடத்தக்கது. படுத்து உறங்கும் தலையணை, பெட்ஷீட், பெட் இவைகளிலும் இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்கிரீன், மிதியடி, குளியலறை சமையலறைக்கு சிங்குக்கு கீழ்ப்பக்கம் இப்படி எல்லா இடத்திலும் இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் வீடு வாசமான வீடாக மாறும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -