ராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு

Rajaram
- Advertisement -

ராஜாராம் மோகன் ராய் அவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் வங்காளத்திலுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் இந்து சமயத்தில் உள்ள மூடம்நம்பிக்கைகள் மற்றும் தேவையில்லாத பழக்க வழக்கங்களையும் தவிர்த்த இவர் அவைகளுக்கு எதிராக குரல் கொடுத்து ஒரு சமூக சமய சீர்திருத்த இயக்கமான “பிரம்ம சமாஜம்” என்ற இயக்கத்தினை நிறுவினார். இதன் மூலம் மக்களை இடையே இருந்த மூட நம்பிக்கைகளை கலைந்தார்.

raja ram-1

மேலும் “சதி” எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தினை ஒழிக்க இவர் தீவிரமாக பாடுபட்டார். பிற்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் மறைந்தது என்றாலும் இவரே அந்த கொடிய நோய் ஒழிய போராடிய முதல் மனிதர் என்றால் அது மிகையாகாது. ராஜாராம் மோகன் ராய் அவர்களுடைய வாழ்க்கை பதிவினை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

ராஜாராம் மோகன் ராய் பிறப்பு :

மேற்கு வங்காளத்தில் உள்ள “ஹூக்ளி” என்கிற மாவட்டத்தில் ராம்காந்தோ ராய் மற்றும் தாரிணி என்கின்ற தம்பதிக்கு மே 22, 1772 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவர்கள் குடும்பம் ஒரு ஆச்சர்யமான பிராமண குடும்பம் ஆகும்.

பெயர் – ராஜாராம் மோகன் ராய்
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – மே 22, 1772
பெற்றோர் – ராம்காந்தோ ராய் மற்றும் தாரிணி
பிறந்த இடம் – ராதா நகர் [ ஹுக்ளி வங்காளம் ]

- Advertisement -

ராஜாராம் மோகன் ராய் அறிந்த மொழிகள் :

சிறந்த கல்வியாளரான இவர் தனது படிப்பு மட்டுமின்றி பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி இவர் பல மொழிகளை கற்று அதில் கைதேர்ந்தவராக இருந்தார். அவர் அறிந்த மொழிகள் கீழே

- Advertisement -

raja ram-3

*ஆங்கிலம்
*பிரென்ச்
*இலத்தீன்
*கிரேக்கம்
*இபிரு
*இந்தி
*சமஸ்கிருதம்

ஆங்கிலேய மோகம் :

ராஜாராம் மோகன் ராய் ஆங்கிலேயே நாகரிகம் மற்றும் பழக்கவழக்கம் மீது அதிக நாட்டம் கொண்டவர். மேலும் அவர்களை போல வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அவரது வாழ்நாள் முழுவதும் இருந்தது. அதனால் அவர் பலமுறை இங்கிலாந்து சென்று தங்கி வந்தார். மேலும் தனது 40 ஆவது வயதில் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சமூக சீர்திருத்த பணிகள் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய ராஜாராம் :

அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் பக்தி மிகவும் அதிகம். ஆனால் இருவருக்கு இந்த சிலைவழிபாடு மற்றும் மூடநம்பிக்கைகளில் ஆர்வம் கிடையாது. இதனால் அவருக்கும் அவரது தந்தைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இதுவே இவரை அவரது பெற்றோர்களை விட்டு பிரிய காரணமானது. வீட்டை விட்டு வெளியேறிய இவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வங்காளம் வந்தார்.

பிரம்மசமாஜ் :

இந்து சமயத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிக்க நினைத்த இவர் பிரம்மசமாஜ் என்ற இயக்கத்தினை நிறுவினார் . இந்த இயக்கத்தின் மூலம் பெண்களின் மறுமணம் மற்றும் உடன்கட்டை ஏறுதல் போன்ற மூட பழக்க வழக்கங்களை அடியோடு கலைக்க அவர் ஒரு சமுதாய சீர்திருத்த வாதியாக தனது வேலையினை தொடர்ந்து செய்து வந்தார்.

raja ram-2

பிரம்மசமாஜ் இயக்கத்தின் முதற்காரணம் சமயங்களை கடந்து மக்கள் கடவுள் ஒருவரே என்ற கூற்றை முன்வைத்து அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக யாவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்பதே.

உடன்கட்டை ஏறும் பழக்கத்தினை எதிர்த்து இவரின் கருத்து :

அந்த காலத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்த பெண்ணை மீண்டும் மறுமணம் செய்து வைக்கக்கூடாது மாறாக இறந்த அந்த கணவனின் உடலோடு மனைவியையும் சேர்த்து தீயிட வேண்டும் . இந்த கொடிய பழக்கத்தினை அவர் ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதித்து வந்தார்.

மேலும் கணவன் இறந்தால் அந்த பெண்ணிற்கு மறுமணம் செய்யவேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் அவளை விதவையாகவாவது வாழவிடுங்கள் என்ற கருத்தினையும் முன்வைத்தார். பிற்காலத்தில் இந்த உடன்கட்டை ஏறும் பழக்கம் முற்றிலும் மறைந்தது. இதன் தொடக்கம் மற்றும் வித்து இவர் இட்டதே என்று கூறினால் அது மிகை அல்ல.

raja ram 4

ராஜா ராம் மோகன் ராய் இறப்பு :

ராஜாராம் மோகன் ராய் அவர்கள் ஒரு முகலாய மன்னனின் தூதனாக ஐக்கிய நாடுகளுக்கு உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை பெற்றுவர பயணம் மேகொண்டார். ஆனால்,அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக, பிரிஸ்டல் அருகிலுள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் செப்டம்பர் 27, 1833 அன்று காலமானார்.

English Overview:
Here we have Raja Ram Mohan Rai biography in Tamil. Above we have Raja Ram Mohan Rai history in Tamil. We can also say it as Raja Ram Mohan Rai varalaru in Tamil or Raja Ram Mohan Rai essay in Tamil or Raja Ram Mohan Rai Katturai in Tamil.

சீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -