மகான் அருளால் நெஞ்சில் கம்பியை குற்றி முதுகில் எடுக்கும் அதிசயம்

Rajakiri Tharga

வீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது
இந்து மாதத்தில் எப்படி சித்தர்களும் மகான்களும் இருக்கிறார்களோ அதே போல இஸ்லாமிய மதத்திலும் மகான்கள் இருக்கிறார்கள். சில மகான்களின் ஜீவ சமாதிகளில் இன்று அவர்களது அருள் நிரம்பி இருக்கிறது. அந்த வகையில் மகானை நினைத்து உடலில் எங்கு கம்பியை குத்தினாலும் துளி கூட ரத்தம் வராமல் இருக்கும் வினோதமான வீடியோ இதோ.

தஞ்சாவூருக்கு அருள்கில் உள்ள ராஜகிரி என்னும் ஊரில் உள்ள தர்காவின் தான் இது போன்ற வினோதமான காட்சி அரங்கேறுகிறது. இங்கு சில மஹான்கள் ஜீவசமாதி அடைந்துள்ளனர். அவர்களை போற்றும் வகையில் சில விழாக்கள் இங்கு நடப்பதுண்டு. அந்த விழா சமயங்களில் இங்கு உள்ளவர்கள் கத்தியை கொண்டு தங்களது வயிற்றில் குத்திக்கொள்கின்றனர், நீளமான கம்பியை நாவில் குத்திக்கொள்கின்றனர், நெஞ்சு வழியாக கம்பியை விட்டு முதுகு வழியாக எடுக்கின்றனர். இதில் வினோதம் என்னவென்றால் இவர் இப்படி செய்கையில் ஒரு துளி ரத்தம் கூட உடலில் இருந்து வெளிவருவதில்லை. அதே போல கம்பிகளும் கத்தியும் குத்தப்பட்ட இடத்தில அதன் தழும்பு கூட இருப்பதில்லை.

நூற்லாஷா மற்றும் ஜோஹர்லாஷா என்னும் இரு மகன்கள் இந்த தர்காவில் சமாதி அடைந்துள்ளனர். இறைபனிக்காக வெளிநாட்டில் இருந்து இங்கு வந்த இவர்கள் தொடர்ந்து இறைபணியாற்றி இங்கேயே சமாதி ஆகி உள்ளனர். இவர்களின் வழி வந்தவர்கள் தான் இந்த தர்காவின் பல ஆச்சர்யங்களை நிகழ்த்துகிறார்கள்.