- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிபரீத ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை

விபரீத ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை

- Advertisement -

பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுபவை பௌர்ணமி மற்றும் அமாவாசை. இந்த இரண்டு நாட்களிலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் அதற்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. மற்ற நாட்களில் செய்வதை விட இந்த நாட்களில் நாம் செய்யும்பொழுது அதற்குரிய பலனை நம்மால் விரைவிலேயே அடைந்து விட முடியும். அந்த வகையில் வரக்கூடிய அமாவாசையானது ஆடி அமாவாசையாக திகழ்கிறது. இந்த நாளில் நாம் மிகவும் எளிமையான முறையில் குலதெய்வத்தின் அருளையும் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பெறுவதற்காக ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ராஜயோகம் தரும் ஆடி அமாவாசை

ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கையில் எப்பேர்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளித்து வாழ்க்கையில் வெற்றியை பெற முடியும். அதே போல் தான் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது கிடைத்துவிட்டால் அவருக்கு இருக்கக்கூடிய வறுமை நிலை முற்றிலும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். இப்படி இவர்கள் இருவரின் அருளையும் பெறுபவர்களுக்கு விபரீத ராஜ யோகமே ஏற்படும். அப்படிப்பட்ட விபரீத ராஜ யோகம் ஏற்படுவதற்கு எளிமையான முறையில் ஆடி அமாவாசை நாளன்று ஏற்ற வேண்டிய தீபமொன்று இருக்கிறது.

- Advertisement -

ஒரு வீட்டில் குலதெய்வமும், மகாலட்சுமி தாயாரும் ஒருசேர வீற்றிருக்கக் கூடிய இடமாக கருதப்படுவது தான் வீட்டு நிலை வாசல். நிலை வாசலில் தான் கிரகலட்சுமி குலதெய்வமும் வீற்றிருக்கிறார்கள். அதனால் தான் சிறப்பு மிகுந்த நாட்களில் நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தான் நிலை வாசலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஒரு வழக்கமும் உண்டானது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நிலை வாசலில் அமாவாசை தினத்தில் நாம் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தோம் என்றால் குலதெய்வத்தின் அருளையும் மகாலட்சுமி தாயாரின் அருளையும் விரைவில் பெற முடியும்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு புதிதாக இரண்டு அகல் விளக்குகள் வேண்டும். அந்த அகல் விளக்குகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்து அகல் விளக்குகளை வைப்பதற்கு சிறிய தட்டு அல்லது ஏதாவது ஒரு இலையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மொட்டு உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய மூன்று கிராம்பை ஒவ்வொரு விளக்கிலும் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தயார் செய்து குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது அப்படியே இருக்க வேண்டும். பிறகுதான் நாம் தீபம் ஏற்ற வேண்டும். அப்படி ஐந்து நிமிடம் கழித்து நாம் ஏற்றும் பொழுது அந்த கிராம்பின் வாசமானது எண்ணெய் முழுவதும் பரவும்.

- Advertisement -

அதன் மூலம் கிராம்பு தீபத்தின் பலனை முழுமையாக நம்மால் பெற முடியும். இந்த தீபத்தை ஜூலை மாதம் 24 ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணிக்குள்ளோ அல்லது மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:00 மணிக்குள்ளோ ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நிலை வாசலுக்கு வெளியே தான் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இந்த தீபம் எரிய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது குலதெய்வத்தையும் மகாலட்சுமி தாயாரையும் மனதார நினைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டே ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஆடி அமாவாசையில் செய்யக்கூடாத காரியங்கள்

சிறப்பு மிகுந்த இந்த தீபத்தை ஆடி அமாவாசை தினத்தன்று ஏற்றுபவர்களுக்கு அவர்களுடைய வறுமை நிலை முற்றிலும் நீங்குவதோடு விபரீத ராஜயோகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்