ரஜினிக்கு ராகவேந்திரர் கொடுத்த சோதனை – உண்மை சம்பவம்

rajini-and-ragavendra
- Advertisement -

தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் ஒரு சிறந்த ராகவேந்திர பக்தர் என்பது பலர் அறிந்த விடயம். ஆனால் அவர் ராகவேந்திரரிடம் கோபித்துக்கொண்டு உன்னை நான் கும்பிடமாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும் ராகவேந்திரரின் பக்தராய் மாறிய சம்பம் ஒன்று அவர் வாழ்வில் நிகழ்ந்தது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Ragavendra

இது குறித்து ரஜினி கூறியது:

- Advertisement -

நான் சிறுவயதில் இருக்கும்போது என் வீட்டில் எல்லோரும் ராகவேந்திர சுவாமியை கும்பிட்டதால் நானும் அவரை ஆரம்பத்தில் கும்பிட ஆரமித்தேன். ஒரு சமயம் என் கனவில் ராகவேந்திரர் வந்தார். அதன் பிறகு நான் பல முறை மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை தரிசித்து வந்துள்ளேன்.

ஒருகட்டத்திற்கு பிறகு நான் மந்த்ராலயம் செல்வதை விடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் மடத்திற்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் செல்ல ஆரமித்தேன். இதனால் ஒருகட்டத்தில் நான் வருவதை அறிந்து அங்கு கூட்டம் சூழ ஆரமித்தது. அதனால் நான் வீட்டிலேயே என் பூஜை அறையில் உள்ள ராகவேந்திரரை வணங்க ஆரமித்தேன்.

- Advertisement -

Ragavendra

இப்படி என் பக்தி ஒருபக்கம் இருக்க, நான் என்னுடைய 25வது படம் நடிக்கையில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னுடைய 100வது படத்தில் நான் ராகவேந்திரராக தோன்றவேண்டும் என்பதே அந்த எண்ணம். அந்த எண்ணம் சிறிது சிறிதாக என்னுள் வளர ஆரமித்தது. இது குறித்து நான் பாலச்சந்தர் சார் கிட்ட பேசினேன். அவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

அதன்படி என்னுடைய 100வது படத்தில் நான் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்தேன். ஆனால் என்னவோ தெரியவில்லை அந்த படம் அப்போது சரியாக ஓடவில்லை. என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் ராகவேந்திரரிடம் வேண்டினான். “நான் இந்த படத்தை பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கவில்லை. உங்களுடைய அற்புதங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்று தான் இந்த படத்தை எடுத்தேன்” ஆனால் இந்த படம் ஓடவில்லை. நீங்கள் எவ்வளவு பெரிய மகான், உங்கள் படத்தை நீங்களே ஓட்டிக்கொள்ளமுடியவில்லை என்றால் பிறகு என்ன? என்று ராகவேந்திரரிடம் கோபித்துக்கொண்டு நான் அவரை ஒரு பத்து பதினைந்து நாட்கள் கும்பிடவே இல்லை.

- Advertisement -

ragavendra

அந்த சமயத்தில் நான் கன்னட நடிகர் ராஜ்குமாரை எதேச்சையாக சந்தித்தேன். அப்போது அவர் ராகவேந்திரர் படத்தை பார்க்க ஆசைப்பட்டார். அதனால் ஒரு காஸெட் தயாரித்து அதை அவருக்கு அனுப்பிவைத்தேன். இதற்கு முன் அவரும் கன்னடத்தில் ராகவேந்திரராய் நடித்திருந்தார். என்னுடைய படத்தை பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது, ஆனால் படம் ஓடவில்லை என்று கவலை படாதீர்கள். நான் நடித்த படமும் ஆரம்பத்தில் ஓடவில்லை ஆனால் போக போக நன்றாக ஓடியது அதுபோல உங்கள் படமும் ஓடும் என்றார்.

இதையும் படிக்கலாமே:
எதையும் துணிவோடு சாதிக்க உதவும் மகா மந்திரம்

ராஜ்குமார் சொன்னபடியே நான் நடித்த ராகவேந்திரர் படம் போக போக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ராஜ்குமார் மூலமாக ராகவேந்திரர் நமக்கு உண்மையை புரியவைத்துள்ளார் என்று நினைத்து அவரை மீண்டும் வணங்க ஆரமித்தேன். இவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் ரஜினி தெரிவித்திருந்தார்.

- Advertisement -