திருமணத்திற்கான ஜாதக பொருத்தங்களில் இவை முக்கியம். ஏன் தெரியுமா?

rajju-porutham

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளிலேயே இல்வாழ்க்கை சிறப்பு பற்றி போற்றும் குறள்கள் பல இருக்கின்றன. நீண்ட காலமாகவே நமது நாட்டில் மணமக்கள் அனைத்து சீரும் சிறப்பும் பெற்று வாழ, பல வகையான நடைமுறைகளை பின்பற்றி பெரியோர்களால் திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் செய்வதற்கு முன்பாக மணமக்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பொருத்தங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வது தற்காலம் வரை கடைபிடிக்கப்படுகிறது. திருமண ஜாதக பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் மற்றும் 16 வகை பொருத்தங்கள் இருப்பதாகவும் கருத்துக்கள் இருக்கின்றன. இப்போதைய பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தத்தை பற்றியும் அதற்கான முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

marriage

ரஜ்ஜு பொருத்தம் என்பது பத்து திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கிய பொருத்தமாக கருதப்படுகிறது. மணமக்கள் இருவரின் ஜாதகத்தில் பத்து பொருத்தங்களில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் அந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் செய்வது தவிர்க்கப்படுகிறது. அந்த அளவு இந்த ரஜ்ஜு பொருத்தத்திற்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ரஜ்ஜு என்பது நட்சத்திரங்களின் வகையாகும். அவை ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன அவை.

சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்:
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.

கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்:
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை – அவரோஹனம் கொண்டவை

astrology wheel

- Advertisement -

உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்:
கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை

ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்:
பரணி, பூரம், பூராடம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை

Nakshatra

பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்:
அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.

திருமணம் செய்யவிருக்கின்ற ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் திருமணம் செய்வதால் மணப்பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகிறது.

astrology

இந்த ரஜ்ஜு ஒவ்வொன்றிலும் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் இருக்கின்றது. திருமண பொருத்தம் பார்க்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் திருமணம் செய்ய விருக்கும் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவருக்கும் தாராளமாக திருமணம் செய்யலாம். அதாவது ரஜ்ஜு ஒருவருக்கு ஏறு முகமாகவும், மற்றவருக்கு இறங்குமுகமாகவும் இருக்க வேண்டும். ஆனால் மணமக்கள் இருவருக்கும் தலை ரஜ்ஜு – சிரசு ரஜ்ஜு என வேறு வேறாக இருந்தால் அவர்களுக்கு பொருத்தம் இல்லை. அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். எனவே திருமண பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மேஷம் லக்னம், ராசிக்கு பிற கிரகங்களால் ஏற்படும் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rajju porutham in Tamil. It is also called as Jothida porutham in Tamil or Rajju porutham parpathu eppadi in Tamil or Thirumana poruthangal in Tamil or Jathaga poruthaangal in Tamil.