மேஷ ராசி, லக்னத்திற்கு பிற கிரகங்களால் ஏற்படும் பலன்கள் இதோ

mesham

ஒவ்வொரு மனிதரும் பிறக்கின்ற போது அவர் பிறக்கின்ற நாள், திதி, நேரம், நட்சத்திரம், மாதம் ஆகியவற்றை கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட ஒரு ஜாதகர் பிறந்த ராசி மற்றும் லக்னமே அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்துத்தான் முழுமையான ஜாதக பலன்களை கூற சாத்தியம் ஏற்படுகிறது. அந்த வகையில் மொத்தம் இருக்கின்ற 12 ராசிகள் மற்றும் லக்னங்களில் முதலாவதாக வருகின்ற மேஷ ராசி மற்றும் லக்னத்திற்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

12 ராசி மற்றும் லக்னங்களில் முதலாவதாக வருவது மேஷ ராசி மற்றும் லக்கினம் ஆகும். இந்த மேஷம் என்பது செவ்வாய் கிரகத்திற்கு உரிய ராசி, லக்னமாக இருக்கிறது. மேஷ ராசி, லக்னத்தில் சூரிய கிரகம் உச்சம் பெறுகிறது. குரு கிரகத்திற்கு நட்பு வீடாக மேஷம் அமைகிறது. சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சம வீடாக அமைகிறது. சனி பகவானுக்கு மேஷ லக்னம் மற்றும் ராசி நீச்ச வீடாகிறது. ராகு – கேது கிரகங்களுக்கு பகை மேஷம் பகை வீடாகிறது.

ஒருவர் பிறந்த லக்னம் அல்லது ராசி மேஷமாக இருந்து அந்த லக்னம், ராசியிலேயே செவ்வாய் கிரகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் பிறவியிலேயே வீரம் நிறைந்தவராக இருப்பார். அதீத உடல் பலம் இருக்கும். அவரது ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வீரியத்தன்மை மிக்காதாக இருக்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மிகுந்த நன்மைகள் ஏற்படும். பூமி, மனை விற்பனை மூலம் லாபங்கள் அதிகம் உண்டாகும்.

jathagam astro

மேஷம் ஜென்ம லக்னமாக அல்லது ராசியாக அமைந்து அதில் சூரிய கிரகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகர் திடகாத்திரமான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். தைரிய குணமும், சிறந்த நிர்வாகத் திறனும் உள்ளவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காவல் துறை, ராணுவம் போன்ற பணிகளில் சிறப்பான சாதனைகள் செய்வார்கள். அரசியல் துறையில் மிக உயரிய பதவிகளை பெறுவார்கள். தந்தை மற்றும் சகோதரர்களால் வாழ்வில் ஏற்றமிகு பலன்களை பெறுவார்கள்.

- Advertisement -

Mesham Rasi

மேஷ ராசி மற்றும் இலக்கினத்திற்கு குரு பகவான் நட்பு கிரகமாக இருப்பதால் குரு கிரக திசா புக்தி காலங்களில் மேஷ ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் ஏற்றமிகு பலன்களை பெறுவார்கள். சந்திரன், சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மேஷத்திற்கு சமமான நிலையை பெற்றிருப்பதால் அந்த கிரகங்களால் மிகுந்த யோகமில்லாத அதே நேரத்தில் அதிக பாதகமும் இல்லாத சமமான பலன்கள் ஏற்பட வழிவகுக்கும்.

sevvai

மேஷ லக்னம், ராசி ஆகியவற்றில் சனி கிரகம் நீச்சமடைந்தால் என்ற லக்னம் அல்லது ராசியில் சனி கிரகம் இருக்கப் பெற்றவர்கள் வாழ்வில் மிகுந்த கஷ்டங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. மேஷத்திற்கு ராகு மற்றும் கேது கிரகங்கள் பகைமை பெறுவதால், இந்த கிரகங்கள் மேஷ லக்னம் அல்லது ராசியில் இருக்கும் போது மேற்கூறிய ராகு – கேது கிரக திசை காலங்களில் மேஷ லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு பாதகமான பலன்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புகளை உண்டாக்குகிறது.

இதையும் படிக்கலாமே:
ஜாதகத்தில் பூமி லாபம் தரும் அமைப்பு எது

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesha rasi lagnam in Tamil. It is also called as Jothida palangal in Tamil or 12 rasis in Tamil or Mesham palangal in Tamil or Mesham lagnam in Tamil.