ராஜ்மால இப்படி ஒரு டேஸ்டியான மசாலா கிரேவியை செய்யலாம்னு நீங்க நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டீங்க. ஆரோக்கியமான ராஜ்மாவை டேஸ்டியா இப்படி செஞ்சு பூரி சப்பாத்தி பரோட்டா கூட எல்லாம் வெச்சு சாப்பிடுங்க.

rajama gavy
- Advertisement -

நாம் அன்றாட உணவில் பல வகையான பயிறை எடுத்துக் கொண்டாலும் கூட இந்த ராஜ்மாவை பெரும்பாலும் அனைவரும் சமைப்பது கிடையாது. ஆனால் இந்த ராஜ்மாவில் நம் உடம்பிற்கு தேவையான அத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளது இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிடும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும். இதில் நார்ச்சத்து, இரும்பு சத்து, ஜிங்க் போன்றவை எல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ராஜ்மாவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது முடி உதிர்வு நின்று விடும். அது மட்டுமின்றி உடல் இளைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை அப்படியே வேக வைத்தும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இந்த ராஜ்மாவை வைத்து எப்படி அருமையான ஒரு மசாலா கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு முதலில் ராஜ்மாவை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு ராஜ்மா மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இதை குக்கரில் ஊற வைத்த தண்ணீருடனே சேர்த்து உப்பு சேர்க்காமல் மூன்று விசில் வரும் வரை விட்டு விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அரை ஸ்பூன் சோம்பு, சேர்த்து பொரிந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஐந்து பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி என அனைத்தையும் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பெரிய சைஸ் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்த்து தக்காளி வெந்த பிறகு கால் கப் துருவிய தேங்காயை சேர்த்த பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே தேங்காய் வதக்கி தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் அரைத்து ஆற வைத்த வெங்காய தக்காளியை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பையன் பேஸ்ட் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா கிரேவி உங்களுக்கு மிகவும் கெட்டியாக வர வேண்டுமெனில் தேங்காய் தவிர்த்து விட்டு வெங்காயம் தக்காளி மட்டும் வதக்கி அரைத்து செய்யலாம் அதுவும் நன்றாகவே இருக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து சூடானதும் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிய பிறகு அரை ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை, அரைத்து வைத்த வெங்காய தக்காளி விழுதையும் ஊற்றி அடுப்பை லோ ஃபிளேமுக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தனியாத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து மிதமான தீயிலே வதக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெங்காயத்தை வைச்சி இப்படி சட்னி அரைச்சீங்கன்னா ஆறு மாசம் ஆனா கூட கெட்டுப் போகாமா சூப்பரா இருக்கும். இட்லி தோசைக்கு மட்டுமில்லைங்க தயிர் சாதத்துக்கு கூட அட்டகாசமா இருக்கும்.

அதன் பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்த ராஜ்மாவை தண்ணீருடன் இதில் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க விட்டால் கிரேவியில் இருக்கும் எண்ணெய் எல்லாம் பிரிந்து வந்து இருக்கும். இதை இறக்கும் போது ஒரு கொத்து கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தூவி இறக்கி விடுங்கள். அருமையான ராஜ்மா மசாலா கிரேவி தயார். இட்லி, தோசை பூரி சப்பாத்தி போன்ற என அனைத்து வகை டிபன், வெரைட்டி ரைஸ்க்கும் இந்த கிரேவி அருமையாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -