வெங்காயத்தை வைச்சி இப்படி சட்னி அரைச்சீங்கன்னா ஆறு மாசம் ஆனா கூட கெட்டுப் போகாமா சூப்பரா இருக்கும். இட்லி தோசைக்கு மட்டுமில்லைங்க தயிர் சாதத்துக்கு கூட அட்டகாசமா இருக்கும்.

onion chutney
- Advertisement -

சட்னி வகைகளில் இந்த வெங்காய சட்னிக்கு என்று தனியாக ஒரு சுவை உண்டு. என்ன தான் மற்ற சட்னிகள் இருந்தாலும் வெங்காயத்தை வைத்து அரைக்கும் சட்னிக்கு நிகர் வேறு இல்லை என்றே சொல்லலாம். பலரும் இந்த சட்னியை செய்ய தயங்குவார்கள் காரணம் இதை செய்து அடுத்த முறை சாப்பிடுவதற்குள் கெட்டுப் போகும் வாய்ப்பு அதிகம். இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல வெங்காய சட்னி அரைத்தால் ஆறு மாதம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் வைத்து சாப்பிடலாம். அந்த வெங்காய சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை

இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அது சூடானதும் மிளகாயில் உள்ள விதைகளை மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 8 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த காரம் உங்களின் தேவைக்கு ஏற்ப கூடவோ குறையவோ சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் கடுகு என அனைத்தையும் சேர்த்த பிறகு மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஊற வைத்து கரைத்து தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் நான்கு பெரிய வெங்காயத்தை எடுத்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீரை ஊற்றி கொதித்த பின் இட்லி தட்டு வைத்து அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தை வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வரை மிதமான தீயில் வேக விடுங்கள்.

வெங்காயம் வேகம் இந்த நேரத்தில் நாம் ஏற்கனவே வறுத்து வைத்த மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பைன் பவுடராக அரைத்துக் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் கழித்து இட்லி தட்டில் இருந்து வெங்காயத்தை எடுத்து ஆற வைத்து அதையும் மிக்ஸி ஜாரில் போட்டு பைன் பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1 ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து அரைத்து வைத்த வெங்காய விழுதை மட்டும் சேர்த்து எண்ணெயிலே பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கரைத்து வடிகட்டிய புளி தண்ணீரை சேர்த்து அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

இந்த புளித்தண்ணீர் ஓரளவிற்கு சுண்டும் போது நாம் ஏற்கனவே கொடுத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து சட்னியை மீண்டும் ஒரு முறை கலந்து விடுங்கள். இதில் இருக்கும் தண்ணீர் மொத்தமாக சுண்டி எண்ணெய் பிரிந்து கெட்டியான பதம் வரும் வரை கலந்து இறக்கி விடுங்கள். சுவையான வெங்காய சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: மீதமான சாதத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்யணும் தெரியுமா? இது தெரிஞ்சா இனி சாப்பாட்டை தூக்கி போட மாட்டீங்க!

இந்த வெங்காய சட்னி இட்லி தோசைக்கு மட்டுமல்ல சாதம், வெரைட்டி ரைஸ் என அனைத்தையுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். இனி நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. இனி எப்போதும் இதையே தான் செய்வீங்க.

- Advertisement -