நாளை 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ராவ நவமி வரவிருக்கிறது. ராமர் இந்த பூமியில் அவதரித்த நாளை தான் ராம நவமையாக கொண்டாடி வருகின்றோம். இந்த நாளில் ராமர் வழிபாடு செய்வது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம். அனுமன், ராமருடைய அதி தீவிர பக்தன். நாளைய தினம் அனுமனை வழிபாடு செய்தால் பல மடங்கு மன உறுதி கிடைக்கும். தோல்வியை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும்.
நீங்கள் எந்த காரியத்தை தொட்டாலும் அது வெற்றி பெறும். ஏனென்றால் ஹனுமனுடைய அகராதியில் தோல்வி என்பது கிடையாது. காரணம் ஹனுமன் ராம பக்தன். ராமனும் அனுமனும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கலந்து தான் இருக்கிறார்கள். நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான ஹனுமன் வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எந்த இடத்தில் ராம நாமம் ஒலித்தாலும், அதைக் கேட்க ஹனுமன் வந்து அமர்ந்து கொள்வாராம். இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுக்கு பக்கத்தில் ஒரு மனை பலகையை காலியாக வையுங்கள். நீங்கள் சொல்லும் ராம நாமத்தைக் கேட்க அந்த ஹனுமன் உங்களுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்வார்.
ராமநவமி வழிபாடு
நாளைய தினம் வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மூன்று வெற்றிலை வாங்கிக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 3 வெற்றிலை, போதும். அதிகபட்சம் உங்களுக்கு 11, 21, 51 எத்தனை வெற்றிலை வாங்கினாலும் தவறு கிடையாது. கொஞ்சம் செந்தூரம் வாங்கிக் கொள்ளுங்கள். வெற்றிலையின் மேலே செந்தூரத்தை தொட்டு ‘ஸ்ரீ ராம ஜெயம்” மந்திரத்தை எழுத வேண்டும். ஸ்ரீ ராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம், ஹனுமன் இருக்கையில் ஏது பயம்.
மூன்று வெற்றிலைகளில் இந்த மந்திரத்தை எழுதி சுருட்டி மாலையாக கட்டி வீட்டில் இருக்கும் ஹனுமனின் திருவுருவப்படத்திற்கு போடலாம். ராமர் பட்டாபிஷேக படத்திற்கு போடலாம். எதுவுமே இல்லை என்றால் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் சன்னிதானம் இருக்கும் கோயிலுக்கு கொண்டு போய் இந்த மாலையை போட்டு விட்டு வரவும்.
மூன்று வெற்றிலைக்கு மேல் எத்தனை வெற்றிலையில் இந்த மந்திரத்தை நீங்கள் எழுதுகிறீர்களோ, அவ்வளவு அனுமனின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் தோல்வி மட்டுமே இருக்கிறது. வெற்றியை காணவே முடியவில்லை என்று துவண்டு போய் இருப்பவர்களுக்கு நாளைய தினம் ஒரு வரப் பிரசாதம்.
இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை நாளைய தினம் எவர் செய்கிறீர்களோ அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டும்தான் இருக்கும். உங்கள் மனதில் ஒரு கோரிக்கையை வைத்து இந்த வெற்றிலை மாலையை நாளை அனுமனுக்கு போட்டால் அந்த வேண்டுதல் மூன்றே நாட்களில் நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதையும் படிக்கலாமே: 6-4-2025 நாளை சொல்ல வேண்டிய ராமநவமி மந்திரம்
உங்களுக்கு நேரமில்லை அவசர அவசரமான இந்த உலகத்தில் அவசர அவசரமாக ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கும் அனுமன் ஆசி பெற ஆசையாக தான் இருக்கிறது என்ன செய்வது. நாளை குளித்து முடித்துவிட்டு கண்களை மூடி “ராமா ராமா ராமா! ஸ்ரீ ராம ஜெயம்” என்ற மந்திரத்தை மனதார உச்சரித்தாலே போதும். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கும் ஹனுமன் ஓடோடி வருவார் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.