இன்று ஸ்ரீ ராம நவமி – இவற்றை செய்தால் மிகுதியான பலன் நிச்சயம் உண்டு

rama-navami

பகவான் மகாவிஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பத்து அவதாரங்கள் எடுத்ததாக புராணங்கள் வாயிலாக நாம் அறிவோம். இந்த அவதாரங்களில் ஏழாவது அவதாரமாக மகாவிஷ்ணு கொண்டது தான் ஸ்ரீ ராம அவதாரம். அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இந்த தினத்தை பாரதம் முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் நாம் செய்ய வேண்டியது குறித்தும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

ராம நவமி என்பது ஸ்ரீராமரின் ஜனன தினத்தை கொண்டாடும் ஒன்பது நாள் விழாவாகும். சில வருடம் இந்த ராம நவமி நன்னாள் சித்திரை மாதத்தில் வருவதும் உண்டு. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும், பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ராமரின் தீவிர பக்தர்கள் பத்து நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவார்கள்.

இந்நாளில் ராமர் கோயில்களில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் பூஜை சடங்கு நடத்தப்படும். அப்பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபடுவது சிறப்பாகும். அன்று கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையில் பட்டாபிஷேக இராமர் படத்தை நன்றாகச் சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டிட்டு, துளசியால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும்.

ramayanam

பிறகு பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். ஸ்ரீராம நவமியன்று, இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, சிறிது நேரமாவது இராமாயணம் படிப்பதோ மிகவும் நல்லது. நாம் அன்றாடம் சாப்பிடும் எளிய உணவை நைவேத்தியமாக வைத்து அதோடு எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் போன்றவைகளை பிரசாதமாக படைக்கலாம். ஸ்ரீ ராம பிரான் விசுவாமித்திரரோடு காட்டில் வாழ்ந்த போது, தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் அருந்தினார். அதன் காரணமாக தான் அவையிரண்டும் ஸ்ரீராமருக்கு நைவேத்தியம் வைக்கப்படுகின்றது.

- Advertisement -

Ramayanam

அர்ச்சனை மற்றும் பூஜை முடிந்த பின், நைவேத்தியப் பொருட்களை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குத் உண்ண கொடுக்க வேண்டும். ஸ்ரீ ராம நவமியன்று காலை முதல் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். குடும்ப நலம் பெருகும், வறுமையும், பிணியும் அகலும். வாழ்க்கை வசதிகள் பெருகும். இராமாயணத்தை முழுமையாகப் படிக்காமல் போனாலும் “ராம்” என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே மேற்கூறிய பலன்களோடு ஆணவம்,காமம், பேராசை போன்றவை அழிந்து அன்பும், அறிவும் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
மூல நட்சத்திர தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rama navami viratham in Tamil. It is also called as Rama navami pooja in Tamil or Sri rama navami sirappu in Tamil or Rama navami valipadu in Tamil or Rama navami palangal in Tamil.