நீங்க மேஷ ராசிக்காரங்களா? அப்போ ஆடு மாறிதான் இருப்பிங்க! அப்படினா மத்த ராசிக்காரங்க எப்படி இருப்பாங்க?

astro-mesham

ஒவ்வொரு ராசிக்காரர்களும் எப்படிபட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்பதை கொண்டு தான் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டறிந்து ராசிக்குரிய குறியீடுகளும் தேர்ந்தெடுத்து வைத்தார்கள். உதாரணத்திற்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடு தான் அவர்களின் குறியீடு அல்லவா? அவர்களின் குணமும், குணாதிசயங்களும் இந்த குறியீட்டை உள்ளடக்கி இருக்கும். இது உங்களின் குணாதிசியங்களை எளிதில் நியாபகம் வைத்துக் கொள்ளவும் உதவும். அதை பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:
mesham-rasi1
மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய குணாதிசயங்கள் தங்களின் குறியீடான ஆட்டை ஒத்ததாக இருக்கும். அதுபோல் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களின் குறியீட்டை தொடர்புபடுத்தி அவர்களின் குணாதிசயங்களும் இருக்கும். ஆட்டு மந்தையில் ஆடுகள் ஒன்றோடொன்று எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும். அதுபோல தான் மேஷராசிக்காரர்கள் கலகக்காரர்களாக இருப்பார்கள். வம்பு சண்டைக்கு செல்லவில்லை என்றாலும் வந்த சண்டையை விட்டு விடமாட்டார்கள். ஆடுகளுக்கு பயம் அறியாத குணமுண்டு. அதுபோல் தான் நீங்களும் தைரியசாலிகளாக இருப்பீர்கள். ஆடுகளுக்கு மரம் ஏற தெரியாவிட்டாலும் வீம்பாக ஏறிவிடும். அதேபோல்தான் இந்த ராசிக்காரர்களும் விவேகம் இல்லாமல் செயல்படுவார்கள்.

ரிஷபம்:
rishabam-rasi
ரிஷப ராசியின் குறியீடாக மாடு உள்ளது. மாடுகள் எப்படி அதன் எஜமானருக்கு கட்டுபட்டு கடினமாக உழைக்கிறதோ, அதேபோல் தான் ரிஷப ராசிக்காரர்களும் கடின உழைப்பாளிகளாக விசுவாசம் கொண்டு இருப்பார்கள். மாடு தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பது போல் இந்த ராசிக்காரர்களும் தங்களின் வேலையில் குறியாக இருப்பார்கள். புதிய விஷயங்களில் இவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை.

மிதுனம்:
mithunam-rasi
மிதுன ராசிக்காரர்கள் தங்களின் குறியீடாக ஆண்-பெண் இணைந்திருப்பது போன்ற உருவம் பெற்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுவார்கள். எனவே அவர்கள் பொதுவாகவே கலகலப்பானவர்கள். எதிர் பாலினத்தவரிடம் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் கூட்டமாக இருப்பதை தான் விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள்.

கடகம்:
kadagam-rasi
கடக ராசிக்காரர்கள் நண்டை குறியீடாக கொண்டவர்கள். நண்டிடம் மிகவும் எச்சரிக்கை குணமிருக்கும். அதேபோல் தான் கடக ராசிக்காரர்கள் எளிதில் யாரையும் நம்பி விடுவதில்லை. நண்டு தன் குஞ்சுகளை அடை காப்பது போல் கடக ராசிக்காரர்களும் குடும்பத்தின் மீது அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் கனிவானவர்கள் மற்றும் பாசக்காரர்கள்.

சிம்மம்:
simmam-rasi
சிம்ம ராசியினர் சிங்கத்தை குறியீடாக கொண்டிருப்பதால் சிங்கத்தின் குணாதிசயங்களை இவர்கள் பெற்றிருப்பார்கள். சிங்கம் எப்பொழுதும் எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும். அதேபோல் தான் சிம்ம ராசிக்காரர்களும் எதையும் அதிகம் போட்டு அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருப்பார்கள். பிறகு வருவதை பிறகு பார்த்துக் கொள்வோம் என்று அலட்சியமாக இருப்பார்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்பதுபோல் சிம்ம ராசிக்காரர்கள் தலைமை பண்பை விரும்புவார்கள். பசித்தால் மட்டுமே வேட்டையாடும் திறன் கொண்டிருப்பதால் தேவையற்ற விஷயங்களை இவர்கள் செய்ய மாட்டார்கள். தன் எல்லைக்குள் சிங்கம் யாரையும் அனுமதிக்காது. அதே போல் தான் இவர்களும் தங்களின் சுதந்திரத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

- Advertisement -

கன்னி:
kanni-rasi
கன்னி ராசிக்காரர்கள் கன்னிப் பெண் உருவம் குறியீடாக கொண்டிருப்பதால் தங்களை எப்போதும் கவர்ச்சியாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டும் என்பதை அதிகம் விரும்புவார்கள். எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சிறுபிள்ளை போல் நடந்து கொள்வார்கள்.

துலாம்:
thulam-rasi
துலாம் ராசிக்காரர்கள் நீதி தேவதையின் கைகளில் இருக்கும் தராசை குறியீடாக கொண்டிருப்பார்கள். இதனால் தராசை போல் எந்த ஒரு விஷயத்திலும் ஏற்ற இறக்கம் இல்லாமல் நடுநிலையாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு நியாயம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும். அநியாயம் செய்பவர்களை பார்த்தால் இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. வியாபார தந்திரங்களை இயற்கையாகவே இவர்கள் கொண்டிருப்பார்கள்.

விருச்சிகம்:
viruchigam-rasi
விருச்சிக ராசிக்காரர்கள் தேள் உருவத்தை தன் குறியீடாக கொண்டிருப்பதால் தேள் எப்படி மறைந்திருப்பதை விரும்புகிறதோ அதேபோல் இந்த ராசிக்காரர்களும் வெளிப்படையாக இருக்க மாட்டார்கள். எதையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களைப் புரிந்து கொள்வதற்கு தனியாக நாம் கோர்ஸ் தான் எடுக்க வேண்டும். பெண் தேள் குஞ்சு பொரித்தால் இறந்துவிடும். அதுபோல் நீங்களும் மற்றவர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயங்குவதில்லை. இவர்கள் யாரோடும் எளிதில் ஒன்றி விடுவதில்லை. அதேபோல்தான் தேளும் மற்றொரு தேளுடன் வசிப்பதில்லை.

தனுசு:
thanusu-rasi
தனுசு ராசிக்காரர்கள் பாதி மனிதனும், மிருகமும் கலந்த உருவம் வில்லேந்தி குறி பார்ப்பதுபோல் குறியீட்டை கொண்டிருக்கிறார்கள். இதனால் இவர்களிடம் மனிதத் தன்மையும், மிருக தன்மையும் கலந்து இருக்கும். எனினும் மனிதனாக இருப்பதற்கு முயற்சி செய்வார்கள். வில்வித்தை தெரிந்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே மன ஒருமைப்பாடு இருக்கும். எதையும் முன்கூட்டியே சிந்திக்கும் ஆற்றல் இருக்கும். ஒரே குறிக்கோளை லட்சியமாகக் கொண்டு பயணிப்பார்கள். வில்லேந்திய ராமன் போல் தர்மத்திற்காக போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகரம்:
magaram-rasi
மகர ராசிக்காரர்கள் முதலையை தங்கள் குறியீடாக கொண்டிருப்பதால் முதலை போல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். பாசாங்கு செய்வதில் முதலையைப் போல் இருப்பீர்கள். முதலை அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும் தன்னைச் சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் அது போல் தான் இந்த மகர ராசிக்காரர்களும் இருப்பார்கள். வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் சட்டென பிடித்துக் கொள்வீர்கள்.

கும்பம்:
kumbam-rasi
கும்ப ராசிக்காரர்கள் மனிதன் பானையை சுமந்து இருப்பது போல் குறியீடு கொண்டவர்கள். இதனால் சேமிப்பின் அடையாளமாக இருக்கும் பானை போல் பணத்தை சம்பாதிப்பதில் நாட்டம் கொண்டு இருப்பார்கள். பிறரிடம் பிரதிபலனை எதிர்பார்க்காமல் இவர்கள் பழகமாட்டார்கள். மற்றவர்களால் இவர்களுக்கு என்ன லாபம் என்று தான் பார்ப்பார்கள். பானை சுமப்பது போல், மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பதற்கும் தயங்கமாட்டார்கள்.

மீனம்:
meenam-rasi
மீன ராசிக்காரர்களுக்கு இரட்டை மீன் இருப்பதால் மீனுடைய குணாதிசயங்கள் இவர்களுக்கு இருக்கும். மீன் எப்படி தன்னைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க விரும்புமோ அதேபோல் தான் அவர்களும் தங்களைச் சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்வதை விரும்புவார்கள். மீனைப் போல எப்போதும் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடுவதை விரும்புவார்கள். எப்போதும் கூட்டமாக இருப்பது தான் மீனின் குணம். அதேபோல்தான் மீன ராசிக்காரர்களும் தனிமையை விட கூட்டம், கூட்டுக்குடும்பம் போன்றவற்றை விரும்புவார்கள்.

இதையும் படிக்கலாமே
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்களாக தான் இருப்பார்கள்! இவங்க கிட்ட அப்படி என்ன வித்தியாசமா இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rasi characteristics in Tamil. Rasi character in Tamil. Rasi symbol Tamil. Rasi symbol meaning in Tamil. Rasi kuriyeedu.