Rasi palan : இன்றைய ராசி பலன் – 06-01-2019

12-rasi
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பேசும்போது பதற்றம் வேண்டாம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasi

உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணலாபம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நீண்டகாலமாகச் சந்திக்காமல் இருந்த பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்ப விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாலையில் நீண்டநாளாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக முடியும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

தனுசு:
Dhanusu Rasi

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

மீனம்:
meenam

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -