Astrology : நீங்கள் இந்தாண்டு எந்த ராசியினரிடம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

12-rasi
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் 12 ராசிகளுக்கும் பல வகையான பலன்கள் சொல்லப்படுகின்றன. ஜோதிடத்தில் இந்த 12 ராசிகளும் ஒன்றுக்கொன்று நட்பாகவும், பகையாகவும் இருப்பதை போலவே, இந்த ராசிகளில் பிறந்த சில ராசிக்கார்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்பாகவும், சிலர் மிகுந்த விரோதிகளாகவும் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு எந்தெந்த ராசியினரிடம் மற்ற ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

மிதுனம் ராசியினர் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் எப்போதும் புதுமைகளை விரும்புபவர்களாக இருப்பார்கள். ஒரே விடயத்தை தொடர்ந்து சில செய்வதால் எளிதில் இந்த ராசியினர் மனசோர்வு அடைகின்றனர். ஒரு வேலை செய்யும் போதே மற்றொரு வேலை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவர். இந்த குணம் பல சமயங்களில் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமால் செய்து விடுகிறது. பணம் சம்பந்தமான விடயங்களில் லாபத்தை மட்டுமே உயர் குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். இந்த ஆண்டு இந்த மிதுன ராசியினருக்கு ஏற்படும் சில கிரக மாற்றங்களால், இவர்கள் பிறருக்கு ஏமாற்றங்களை தரும் சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் மற்ற ராசியினர் மிதுன ராசியினரிடம் அனைத்து விடயங்களிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்மம்:

- Advertisement -

simmam

சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசியில் பிறந்த நபர்கள் நியாயமான குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே எல்லா விடயங்களிலும் பிறர் சிம்ம ராசியினருடன் நியாயமாக நடந்து கொள்வார்களேயானால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். எனினும் இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களில் ஏற்படும் சில கிரகங்களின் மாற்றங்களால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுடன் மற்ற ராசியினருக்கு எந்த ஒரு விடயத்திலும் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் போன்றவை ஏற்படும் சூழல் ஏற்படும். எனவே இந்தாண்டு வரும் காலங்களில் சிம்ம ராசியினருடனான உறவுகளில் மற்ற ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வதால் நன்மை ஏற்படும்.

துலாம்:

- Advertisement -

Thulam Rasi

துலாம் ராசியினர் வாழ்க்கையில் எப்போதும் இன்பத்தையே அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். காதல் உறவுகளில் மிகுந்த அதிர்ஷ்டம் உள்ள இந்த ராசியினர், அந்த உறவுகளை தக்கவைத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இன்பத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரும் இந்த ராசியினர், தங்கள் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்வதிலும் கவனம் செலுத்துவது அவசியம். இந்த ஆண்டு துலாம் ராசியினருக்கு ஏற்படும் சில கிரக மாற்றங்களினால் பணம் சம்பந்தமான விடயங்களில் இந்த ராசியினருக்கும் மற்ற ராசியினருக்கும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மற்ற ராசியினர் துலாம் ராசியினருடனான விடயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

virichigam

விறுக்கென்று தேள் கொட்டுவது போல பேசுவது விருச்சிக ராசியினருடைய குணம் மற்ற ராசியினர் அறிந்ததே. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் குணம் எப்போதும் விருச்சிக ராசியினருக்கு இருந்ததில்லை. ஆனால் சில சமயங்களில் சில விடயங்களில் வெளிப்படையாக பேசுவதால் உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது. அதிலும் இந்த ஆண்டில் வரவிருக்கும் மாத காலங்களில் ஏற்படவிருக்கும் கிரகங்களின் மாற்றங்களால் விருச்சிக ராசியினரின் மனநிலை சற்று சீற்றம் நிறைந்தாதாக இருக்கும். இது சமயங்களில் மற்ற ராசியினருடனான உறவுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே மற்ற ராசிக்காரர்கள் இந்த ஆண்டு விருச்சிக ராசியினருடன் பழகும் போது கவனமுடன் பழகுவதும், சூழ்நிலைகளை பக்குவமாக கையாள்வதாலும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
விசாகம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Rasigal echarikkai in Tamil. It is also called as 12 rasis in Tamil or 12 rasikal in Tamil or Rasigal in Tamil or Rasigalin palangal in Tamil.

- Advertisement -