அடிமையாக தொழில் செய்ய விரும்பாதவர்கள் இதை மட்டும் அணிந்தால் அதிகாரம் செய்யும் நிலைக்கு மாறலாம் தெரியுமா?

rasikal-astro-blue

பொதுவாகவே யாருக்கும் மற்றவர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் மற்றவர்களிடம் அடிமையாக வேலை செய்யும்படி செய்து விடுகிறது. சுயமாக முன்னேறலாம் என்றால் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகின்றன. இல்லையென்றால் வாய்ப்புகளே கிடைக்காமல் போய் விடுகின்றன. இது போன்றவர்கள் தங்களுடைய சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்ள இந்த விஷயங்களை தேர்வு செய்யலாம். உங்கள் ராசிக்கு உரிய சரியான ரத்தினங்களை தேர்வு செய்தால் அடிமையாக இருந்த நீங்கள் மற்றவர்களை அதிகாரம் செய்யும் நிலைக்கு உயர்வீர்கள். அதைப் பற்றிய தகவல்களை இப்பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

rathinangal-rasikal

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு ரத்தினங்களை தேர்வு செய்வதன் மூலம், அதை ஏதாவது ஒரு ரூபத்தில் நீங்கள் உங்கள் உடலில் அணிந்து கொண்டால் நிலைமையே வேறாக மாறும். மோதிரமாகவோ அல்லது கழுத்தில் அணியும் செயின் டாலராகவும் கூட போட்டுக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு தங்களுக்கு உகந்த ரத்தினத்தை அணிவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் தான் பார்க்க இருக்கிறோம்.

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் உங்கள் பெயரின் கூட்டு எண்ணிக்கை 9 என்று வந்தால் நீங்களும் பவழம் அணியலாம். நீங்கள் பவழம் அணிந்து கொண்டால் அடிமையாக இருந்து வந்த நிலை மாறி அதிகாரத்தின் உச்சிக்கு செல்வீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெரிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் உண்டாகும். அதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

pavalam

சொத்து சம்பந்தமான சிக்கல்கள் இருந்தாலும் நீங்கிவிடும். பவளத்தை அணிவதால் வாழ்க்கையில் மட்டுமல்ல, உடல் நிலையிலும் நிறைய மாற்றங்கள் உண்டாகும். இரத்த சோகை, மஞ்சள் காமாலை, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அலர்ஜி போன்ற நோய்கள் இருந்தாலும் நீங்கிவிடும். இந்த பிரச்சினைகளை நீங்கள் அனுபவித்து வந்தால் நிச்சயம் பவழம் அணிந்து கொள்வதால் மேற்கூறிய மாற்றங்கள் நிகழும்.

- Advertisement -

மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் மற்றும் நட்சத்திர அடிப்படையில் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவர்களும், பெயரின் கூட்டு எண் 8 என்கிற எண்ணிக்கையை கொண்டவர்களும் நீலக்கல் எனப்படும் ரத்தினத்தை அணியலாம். நீங்கள் நீலக்கல் மோதிரம் அணிவதால் உங்களுடைய குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவை எடுப்பீர்கள். தொழில் சம்பந்தமான அத்தனை பகைவர்களும் தானாகவே விலகிக் கொள்வார்கள். சிறைபட்டிருந்த உங்களுடைய வாழ்க்கை, சுதந்திரமாக மாறும். சட்ட ரீதியான பிரச்சினைகளில் சிக்கி இருப்பவர்கள் தாராளமாக இதை அணிந்து கொள்ளலாம் நிச்சயமாக சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

blue sapphire

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் உங்களுடைய பெயரின் கூட்டு எண்ணிக்கை 4 என்று வருபவர்களும் கோமேதகம் அணிய நல்ல பணவரவு உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள், பைனான்ஸ் விடுபவர்கள், பெரிய பெரிய தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் என்று பணம் சரளமாகப் புழங்கும் அத்தனை பேருக்கும் மென்மேலும் லாபம் பெருக கோமேதகம் அணியலாம். இவை ஜோதிட ரகசியங்கள் நீங்களும் அணிந்து பயன் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
மனசுக்கு புடிச்சவங்களா திருமணம் செய்ய நாள் குறிக்கனுமா? அதுக்கு முன்னாடி இதையெல்லாம் முதல்ல தெரிஞ்சுக்கோங்க.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.