உங்கள் ராசியில் சனி பகவான் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

Sani bagavaan
- Advertisement -

நவகிரகங்களின் பெயர்ச்சியில் அனைவருமே சற்று பயத்துடன் எதிர்பார்க்கும் பெயர்ச்சி “சனி பெயர்ச்சி“. அதற்கு காரணம் சனி பகவான் ஒரு மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கும் “ஆயுள்காரகனாக” இருப்பதால் தான். மேலும் மற்ற எல்லாக் கிரகங்களை விட ஒரு மனிதனுக்கு அதிகத் துன்பங்களை ஏற்படுத்துவதும், மற்ற எல்லாக் கிரகங்களை விட நற்பலன்களை அதிகமாக கொடுக்கும் சக்திவாய்ந்த கிரகம் “சனி கிரகம்”. அப்படியான சக்திவாய்ந்த சனி பகவான் ஜாதகத்தில் 12 ராசிக்கட்டங்களில் ஒவ்வொரு ராசியிலிருப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு காணாலாம்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசியில் சனி இருந்தால் முரட்டுத்தனமான பேச்சுகளையும், செயல்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் கடினமாக உழைத்தே அனைத்தையும் ஈட்டவேண்டியது இருக்கும். உறவினர்கள் நண்பர்களால் எவ்வித அனுகூலமும் இருக்காது. பாவகரியங்களை துணிந்து செய்யும் எண்ணமிருக்கும். பொதுவாக ஒரு கஷ்டமான வாழ்க்கையையே வாழ்வார்கள்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசியில் சனி இருந்தால் தங்கள் தகுதிக்கு மிகவும் கீழான பணிகளையே செய்து பொருளீட்டுவார்கள். முரட்டு பேச்சும் தர்க்கம் புரியும் திறனையும் பெற்றிருப்பார்கள். ஒரு சிலர் வழக்கறிஞர்களாக பணியாற்றுவார்கள் .தீய நண்பர்களால் கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்வார்கள். இவர்களுடைய பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது.

மிதுனம்
midhunam
மிதுனத்தில் சனி இருக்கப்பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றலைக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவ்வளவு நல்ல குணங்கள் இவர்களிடம் இருக்காது. எடுத்துக்கொண்ட வேளையில் வெற்றிபெற மிகவும் கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார்கள். இவர்கள் தங்கள் சொந்த முயற்சி மற்றும் கடின உழைப்பால் பல பெரிய நிறுவனங்களை உருவாக்குவார்கள். ஒரு சிலர் தீயவர்களின் சகவாசத்தால் சிறை செல்லும் நிலையும் ஏற்படும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசியில் சனி இருந்தால் அந்த ஜாதகர் அவரின் சிறு வயதில் அடிக்கடி உடல்நல பாதிப்பால் அவதிப்படுவார். நல்ல குணங்களை பெற்றிருப்பார்கள். நல்ல தோற்றப்பொலிவு பெற்றிருப்பார்கள். கடல் கடந்து சென்று அங்கே மிகப்பெரும் ஸ்தாபனங்களை உருவாக்கும் திறனுடையவர்கள் இவர்கள். அரசியலில் மிகப்பெரும் நிலையிலிருப்போர்களின் நட்பு கிடைக்கும்.

சிம்மம்
simmam
சிம்மத்தில் சனி இருக்கப்பெற்றவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கலைகளில் ஆர்வமும், அதில் புகழ் பெரும் அமைப்பும் கொண்டவர்கள். ஒரு சிலர் கடுமையான உடலுழைப்பின் மூலம் மட்டுமே செல்வம் ஈட்டக் கூடிய நிலையிலிருப்பர். சிலர் சமூக விரோதிகளாகவும் மாற கூடும்.

கன்னி
Kanni Rasi
கன்னி ராசியில் சனி இருந்தால் அவர்களின் பொருளாதார நிலை அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஈவு, இரக்கமற்றவர்களாக இருப்பார்கள். கீழ்த்தரமான செயல்களை துணிந்து செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் தனக்கு பிடித்தவர்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயங்காதவர்களாக இருப்பார்கள். காவல் துறை, ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் சாகசங்கள் புரிவார்கள்.

துலாம்
Thulam Rasi
துலாமில் சனி இருக்கப் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாற்றலை உடையர்களகாக இருப்பார்கள். அப்பேச்சாற்றலின் மூலமாகவே ஒரு சிலர் செல்வம் ஈட்டுவார்கள். அரசியலில் ஈடுபடுவோர்கள் மிகப்பெரும் பதவிகளை அடைவார்கள். வாழ்க்கையின் நடுவயதுகளில் அதிகமான சொத்துக்களை சேர்ப்பார்கள். இவர்கள் தொடங்கும் தொழில் நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சி அடையும்.

விருச்சுகம்
virichigam
விருச்சிகத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள் முன்கோபம் அதிகமுள்ளவர்கள். அவ்வப்போது சிறிது உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். காரசாரமான உணவுகளை அதிகம் விரும்பி உண்பர். பிறரைத் துன்புறுத்தும் குணம் கொண்டிருப்பர். மிகவும் கடினமாக உழைத்து செல்வம் ஈட்டுவார்கள். இவர்களின் பொருளாதார நிலை சமமானதாக இருக்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசில் சனி இருப்பவர்களுக்கு மென்மையான, பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனம் இருக்கும். சிறந்த நற்குணங்களைப் பெற்றிருப்பார்கள். நல்ல விஞ்ஞான அறிவும், புதிய கருவிகளை உருவாக்கும் திறனும் இருக்கும். மனிதாபிமானம் அதிகமாக இருக்கும். அடிக்கடி புனிதத் தலங்களுக்கு யாத்திரைகள் மேற்கொள்வார்கள். ராணுவம் மற்றும் காவல் துறையிலிருப்பவர்களுக்கு, அத்துறையின் உயர்ந்த பதவி கிடைக்கும் யோகமேற்படும்.

மகரம்
Magaram rasi
மகரத்திலிருக்கும் சனி ஜாதகரை பெரும்பாலும் வசதியான குடும்பத்தில் பிறக்கச் செய்யும். சிறந்த அறிவாற்றலும் அதன் மூலம் செல்வம் சேர்க்கக்கூடிய திறன் பெற்றவர்கள். வாழ்வில் மிகப் பெரும் நிலைக்கு உயர்வார்கள். இவர்கள் மிகச் சிறந்த நிர்வாகிகளாக இருப்பார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வரக்கூடிய யோகம் கொண்டவர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்பத்தில் சனி இருந்தால் நல்ல குணங்கள் இருக்கும். பேச்சில் அறிவுக்கூர்மையும், துடுக்குத்தனமும் மேலோங்கும். இவர்களில் ஒரு சிலர் தீயவர்களின் சகவாசத்தால் காவல் நிலையம், சிறை போன்றவற்றிற்கு செல்லக் கூடிய நிலையும் உண்டாகும். நல்ல உடல் மற்றும் மன வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் ஈடுபடும் ஒரு சிலர் சித்தர்கள் ஆகக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

மீனம்
meenam
மீனத்தில் உள்ள சனி எந்த ஒரு நிர்வாகத்திலும் அதன் தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக இருப்பார்கள். மனைவி மூலம் செல்வம் பெரும் அதிர்ஷ்டம் உண்டாகும். கோவில் எழுப்புதல் குளம் அமைத்தல் போன்ற புனித காரியங்களில் ஈடுபடுவார்கள். அளவுக்கதிகமான செல்வச் செழிப்பு ஏற்படும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். பல யோகிகளையும், ரிஷிகளையும் சந்திக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

- Advertisement -