ரேஷன் அரிசியில் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாத இடியாப்ப மாவு எப்படி செய்வது உங்களுக்கு தெரியுமா?

rice-idiyappam-puttu
- Advertisement -

ரேஷனில் கொடுக்கப்படும் அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் உண்டு! அதை வீணாக்காமல் நமக்கு கிடைக்க சாதம் தான் வடித்து சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. அரிசியை வீணாக்காமல் வேறு வழிகளிலும் அதனை உபயோகப்படுத்தலாம். குறிப்பாக இது போல மாவு செய்து வைத்துக் கொண்டால் கொழுக்கட்டை, இடியாப்பம், புட்டு போன்ற உணவு வகைகளை சுவையான பக்குவத்தில் செய்து மகிழலாம். அந்த வகையில் ரேஷன் அரிசி வைத்து இடியாப்ப மாவு எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ration-rice

முதலில் ரேஷன் அரிசியில் பச்சை அரிசியை எடுத்துக் கொண்டு அதில் கல், குருணை போன்ற பொருட்களை நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த இந்த அரிசியை மூன்று முறை தண்ணீரில் நன்கு கலைந்து அலசி வைத்து கொள்ளுங்கள். பின்னர் அரிசி மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீர் ஊற்றி சுமார் 4 மணி நேரம் அளவிற்கு ஊற வையுங்கள். நான்கு மணி நேரம் கழித்து அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விடுங்கள்.

- Advertisement -

அரிசியில் கொஞ்சம் கூட தண்ணீர் இருக்கக் கூடாது. ஆனால் அரிசி ஈரப்பதத்துடன் அப்படியே இருக்க வேண்டும். இதனை கொஞ்சமாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் நைஸாக அரைத்தாலும் அதிலும் குருணை இருக்க தான் செய்யும். எனவே நன்கு சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் குருணையுடன் சேர்த்து ஊறிய அரிசியை மீண்டும் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதே முறையில் நீங்கள் ஊற வைத்த எல்லா அரிசியையும் சேர்த்து மாவாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

arisimavu

கிடைத்த மாவை சலித்த பின்பு கை வைத்து நன்கு அழுத்தி விடுங்கள். அப்பொழுது தான் மாவு காற்றுபட்டு உணர்ந்து போகாமல் இருக்கும். பின்னர் ஒரு இட்லி பானையில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டை துணியால் மூடி வைக்கவும். பின்னர் துணியின் மீது அரிசி மாவை உதிர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேக விடவும். அரிசி நன்கு வெந்து கைகளில் தொட்டுப் பார்த்தால் சேமியா போல உருண்டு வரும். இது சரியான பதமாக இருக்கும்.

- Advertisement -

பின்னர் ஒரு பெரிய தட்டில் மாவைக் கொட்டி நன்கு ஆற விடுங்கள். பின்னர் வெயிலில் இரண்டு நாட்கள் வரை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய வைத்த மாவு குருணை குருணையாக இருக்கும். இந்த மாவை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக ஒரு முறை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்காமல் ரேஷன் அரிசியிலேயே ஆரோக்கியமான இடியாப்ப மாவு தயார் ஆகிவிட்டது. இந்த மாவை கொண்டு இடியாப்பம், கொழுக்கட்டை, புட்டு போன்ற உணவு வகைகளை சட்டென செய்து விடலாம். ஒரு வருடம் வரை இந்த மாவு கெட்டுப் போகாது அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

maavu

இதில் நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை விட்டு நன்கு பிசைந்து ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் செய்து முடித்து விடலாம். இடியாப்பம், கொழுக்கட்டை, புட்டு போன்ற உணவு வகைகள் அதிக சுவையுடனும், அற்புதமான மணமுடனும் ஆளை தூக்கும், மேலும் இது ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கும் எனவே நீங்களும் இது போல் முயற்சி செய்து பயன் அடையுங்கள்.

- Advertisement -