ரேஷன் அரிசியிலும் பஞ்சு போன்ற வெள்ளை வெளேர் இட்லி வரணுமா? அப்படின்னா இந்த பொருளை சேர்த்து இட்லி மாவு அரைத்து தான் பாருங்களேன்!

soft-idli-ration-rice
- Advertisement -

ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைப்பவர்கள் அதனுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து அரைக்கும் பொழுது இட்லி நல்ல பஞ்சு போன்ற மெத்தென்று வெள்ளையாக வரும். சிலருக்கு என்னதான் தரமான அரிசி வாங்கி இட்லி மாவு மாங்கு மாங்கு என்று அரைத்து வைத்தாலும் காலையில் இட்லி சுடும் பொழுது வெறுத்து போய்விடும். இட்லி அவ்வளவு கல்லாக இருக்கும். ஆனால் ரேஷன் அரிசியில் கூட சூப்பரான பஞ்சு போன்ற இட்லியை எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக ரேஷன் அரிசியில் ரெண்டு ஆழாக்கு அரிசிக்கு, இரண்டு ஆழாக்கு இட்லி அரிசி சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சு போல வரும். அல்லது புழுங்கல் அரிசி ரெண்டு ஆழாக்கு, பச்சரிசி 2 ஆழாக்கு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். முழுமையாக ரேஷன் அரிசி பயன்படுத்தினாலும் சரி அல்லது இது போல இட்லி அரிசியுடன் பாதிக்கு பாதி ரேஷன் அரிசியை சேர்த்து அரைத்தாலும் சரி இட்லி நன்றாக தான் வரும்.

- Advertisement -

இப்போது இரண்டு ஆழாக்கு இட்லி அரிசி, இரண்டு ஆழாக்கு ரேஷன் அரிசி சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கல், குருணை அல்லது ஏதாவது தூசுகள் இருந்தால் அதை நன்கு முறத்தால் தட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மூன்று நான்கு முறை நல்ல தண்ணீர் கொண்டு அலசி கொள்ளுங்கள். அப்போது தான் அதில் இருக்கும் மண், தூசி போன்றவை முழுமையாக நீங்கும். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசியுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும்.

முழு வெள்ளை உளுந்தை அரிசி அளந்த அதே ஆழாக்கில் ஒரு ஆழாக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக 5 மணி நேரம் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும். ஐந்து மணி நேரம் நன்கு ஊறுவதற்குள் கடைசி அரை மணி நேரத்தில் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு வெள்ளை அவல் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது ஆப்ஷனல் தான் அவல் இல்லை என்றால் விட்டுவிடலாம்.

- Advertisement -

5 மணி நேரம் நன்கு ஊறிய பிறகு உளுந்தை கிரைண்டரில் சேர்த்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு மதியம் செய்த வெள்ளை சாதத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல ஊற வைத்த அவலையும் தண்ணீருடன் சேர்த்து நன்கு ஆட்ட வேண்டும். 30 நிமிடம் தண்ணீரை தெளித்து தெளித்து பொங்க பொங்க ஆட்ட வேண்டும். அதிகம் தண்ணீர் தெளித்து விடக்கூடாது. அதே போல தண்ணீர் தெளிக்காமல் ரொம்ப நேரம் ஓடவும் விடக்கூடாது. 30 நிமிடத்திற்கு பிறகு உளுந்த மாவை ஒரு எவர்சில்வர் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அரிசியை போட்டு பத்து நிமிடம் நன்கு ஆட்டி எடுங்கள். ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்னர் இரண்டையும் சேர்த்து தேவையான அளவிற்கு கல் உப்பு போட்டு நன்கு கைகளால் 10 நிமிடத்திற்கு குறையாமல் கலந்து விடுங்கள். அப்போது தான் மாவு நன்கு புளித்து கெட்டிப்படும். இரவு முழுவதும் ஊற விட்டு விட வேண்டும். சுமார் எட்டு மணி நேரத்திற்கு பிறகு காலையில் திறந்து பார்த்தால் புசுபுசுவென சூப்பரான இட்லி மாவு தயாராகி இருக்கும். பின்னர் இதை இட்லி பாத்திரத்தில் அவித்து பாருங்கள், குஷ்பு இட்லி போல மெத்தன்று இருக்கும்.

- Advertisement -