ஹோட்டல் ஸ்டைலில் பூரி மசாலா இப்படி சுலபமா செஞ்சி அசத்தலாம்.

poori-masala_tamil
- Advertisement -

ஹோட்டலில் தருவது போல புசுபுசுன்னு பூரியும், டேஸ்டியான பூரி உருளைக்கிழங்கு மசாலாவும் கொடுத்தால் காலை பொழுது அவ்வளவு அற்புதமாக இருக்கும். எல்லோருக்குமே பூரி என்றாலே புடிக்கும். அது ரொம்ப நேரம் புஸ்சுன்னு இருக்க அது கூட நாம ரெண்டு பொருளை சேர்த்து மாவு பிசையனும். அந்த பொருட்கள் என்னென்ன? பூரி மசாலா ரொம்ப சுலபமாக டேஸ்ட்டியாக ஹோட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி? என்றும் தான் இந்த சமையல் குறிப்பு பதிவுல நாம தெரிஞ்சுக்க போகிறோம்.

பூரி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 300 கிராம், பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – இரண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பூரி மசாலா செய்முறை விளக்கம்:
பூரி மசாலா செய்வதற்கு முதலில் 300 கிராம் அளவிற்கு உருளைக்கிழங்குகளை தோல் நீக்காமல் பாதி பாதியாக வெட்டி குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். வெந்த உருளைக்கிழங்கை ஆறியதும் தோல் நீக்கி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் நன்கு வறுபட்டதும் துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்குங்கள். இவை வதங்கி வரும் பொழுது பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடுங்கள். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை நன்கு மசித்து இதனுடன் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள். ஓரளவுக்கு தண்ணீர் எல்லாம் வற்றி தளதளன்னு ஆனதும் நறுக்கிய மல்லி தழை தூவி அப்படியே இறக்க வேண்டியது தான். சிலர் உருளைக்கிழங்கு மசாலா கெட்டியாக வருவதற்கு கடலை மாவை கொஞ்சம் போல தண்ணீரில் கரைத்து சேர்ப்பார்கள். அது போல சேர்த்தால் டேஸ்ட் மாறிவிடும் எனவே பிரஷ் ஆன உருளைக்கிழங்குகளை எந்த மசாலாவும் சேர்க்காமல் ரொம்ப சுலபமாக இப்படி செஞ்சி பாருங்க, டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். பூரி எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
தை அமாவாசைக்கு மறக்காம செய்ய வேண்டிய ஒரு டிஷ் இது தானா? அமாவாசையில் வாழைக்காய் சமைப்பது ஏன்?

பூரி புஸ்ஸுன்னு அப்படியே இருக்க என்ன செய்யனும்?
பூரிக்கு மாவு பிசையும் பொழுது ஒரு கப் கோதுமை மாவுடன் அரை ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் வறுத்த ரவையும் சேர்த்து பிசையுங்கள். அது போல தேய்க்கும் பொழுது எண்ணெய் பயன்படுத்துங்கள். மாவு பயன்படுத்த வேண்டாம். சற்று தடிமனாக எல்லா புறமும் ஒரே மாதிரியான ஷேப்பில் இருக்குமாறு வட்டமாக தட்டி சேர்த்தால் பூரி புஸ்ஸுன்னு உப்பி வரும். நீண்ட நேரம் ஆனாலும் அப்படியே இருக்கும் அமுங்காது.

- Advertisement -