ஹோட்டல் ஸ்டைலில் சுவையான மொறுமொறு ரவா தோசையை நம் வீட்டிலும் சுட்டு அசத்தலாமே! இந்த 3 டிப்ஸ் தெரிந்தால் போதும்.

rava-dhosai
- Advertisement -

நிறைய பேருக்கு கடைகளில் சாப்பிடும் ரவா தோசையை அவரவர் வீட்டிலும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். கடையில் சாப்பிடும் சுவையில், ரவா தோசை நமக்கு வீட்டில் கிடைக்காது. ஆனால் இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கும் அளவுகளில் மாவை கரைத்து, சின்னச்சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி ரவா தோசை செய்தால் கட்டாயமாக மொறுமொறுவென ஓட்டலில் கிடைப்பது போல தோசை கிடைக்கும். கொஞ்சம் பொறுமையும், கொஞ்சம் பக்குவமும் இருந்தாலே போதும் ரவா தோசையை நம் வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம். அது எப்படி நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா?

rava-dhosai1

ரவா தோசைக்கு தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப், பச்சரிசி மாவு – 1/2 கப், மைதா – 1/4 கப், உப்பு தேவையான அளவு, பொடியாக துருவிய இஞ்சி – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு கொற கொறப்பாக நறுக்கியது – 1 ஸ்பூன், வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1. (ரவையை எந்த கப்பில் அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ அதே கப்பில் தான் பச்சரிசி மாவையும், மைதா மாவையும் அளந்து கொள்ள வேண்டும்.)

- Advertisement -

ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் ரவை, பச்சரிசி மாவு, மைதா, உப்பு இந்த 4 பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு தண்ணீர் ஊற்றி இந்த மாவை, கட்டி படாமல் தண்ணீர் பதத்தில் கரைத்து, இஞ்சி பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, சீரகம், மிளகு வெங்காயம் சேர்த்து, அப்படியே மூடி போட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்து விடவேண்டும். மாவு ஊறியதும், இன்னும் கொஞ்சம் கெட்டியாக மாறி இருக்கும்.

rava-dhosai2

மீண்டும் தேவைக்கு ஏற்ப தண்ணீரை நன்றாக ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். மாவு திக்காக இருந்தால் கட்டாயம் தோசை மொறு மொறுவென சிவந்து வராது. கட்டாயம் 1 கப் ரவைக்கு 5 லிருந்து 6 பங்கு தண்ணீர் தேவைப்படும். அதற்கு மேலே உங்கள் ரவை தண்ணீரை உறிஞ்சினால், அதற்கேற்ப தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு கொஞ்சமாக தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் அல்லது ஒரு துணி வைத்து கல்லை நன்றாக துடைத்துவிட்டு, அடுப்பை ஃபுல் ஃபிலேமில் வைத்து, ஒரு கரண்டியால் தோசை மாவை எடுத்து தோசைக்கல்லில், மாவை வட்ட வடிவமாக ஊற்றி விடுங்கள்.

ரவா தோசையை ஊற்றி தேய்க்கக்கூடாது. மாவை தோசைக்கல்லில் தெறித்தால் போல் ஊற்றவேண்டும். மாவு ஓட்டை ஓட்டையாக தோசைக் கல்லில் விழும். அந்த ஓட்டைகளை ஒரேயடியாக மூடி விடாதீர்கள். ஹோட்டலில் கொடுப்பது போல நம் வீட்டிலும் ரவா தோசையை ஓட்டை ஓட்டையாகத்தான் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

rava-dhosai4

மாவை தோசைக்கல்லில் ஊற்றிய பின்பு, அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசை முறுகலாக சிவக்க வைக்க வேண்டும். தோசை 1/4 பாகம் வெந்தவுடன், தோசையில் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் ஊற்றி வேகவிடுங்கள். தேவைப்பட்டால் திருப்பிப் போட்டு எடுத்துப் பரிமாறலாம். அப்படி இல்லை என்றால் மிதமான தீயில் இந்த ரவா தோசையை திருப்பி போடாமலேயே நன்றாக வெந்திருக்கும். அப்படியே எடுத்து பரிமாறினாலும் நல்லது. ஒரு தோசை வேக கட்டாயம் 2 லிருந்து 3 நிமிடங்கள் எடுக்கும்.

rava-dhosai3

ரவா தோசையை மொறுமொறுவென சுடுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய மூன்று குறிப்புகள்:
1. தோசை மாவு தண்ணீர் பதத்தில் தான் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தோசை மாவு கெட்டியாக இருக்கக் கூடாது. கெட்டி மாவில் கட்டாயம் தோசை நன்றாக வராது.

rava-dhosai5

2. கடாயை நன்றாக சூடு படுத்தி, அதன் பின்பு தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி, அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொஞ்சம் பொறுமையாக தோசையை சுட்டு எடுக்க வேண்டும். அவசரப்பட்டால் தோசை மொறு மொறுவென வராது. ஒரு தோசையை மிதமான தீயில் சுட்டு எடுத்துவிட்டு, அதன் பின்பு மீண்டும் தோசைக்கல் நன்றாக காய்ந்த பின்பு இரண்டாவது தோசை ஊற்ற வேண்டும்.

3. ரவா தோசைக்கு மாவை கட்டாயம் மேலே சொன்ன அளவுகளில்தான் கலக்க வேண்டும். அந்த மாவு 20 நிமிடங்கள் ஊற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த 3 குறிப்புகளை பின்பற்றினாலே போதும். ரவா தோசையை சுட்டு அசத்தலாம். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -