ருசியான ரவா பொங்கல் ரெசிபி! என்னது ரவையில் பொங்களான்னு யோசிக்கதிங்க, இப்படி செஞ்சி பாருங்க டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்.

- Advertisement -

பச்சரிசியில் பொங்கல் வைத்து நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் ரவையில் அற்புதமான சுவையில் பொங்கல் செய்வது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா? ரவை வைத்து பொதுவாக உப்புமா, கிச்சடி, கேசரி போன்றவற்றை தான் நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இது போல பாசிப்பருப்பு சேர்த்து ஒரு முறை பொங்கல் வைத்து பாருங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். ரொம்பவே சுலபமாக நம் வீட்டில் தயாரிக்க கூடிய இந்த ரவை பொங்கல் ரெசிபி செய்முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

ரவை – 200 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், தண்ணீர் – ஐந்து கப், நெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்புகள் – 10.

- Advertisement -

செய்முறை

ரவை பொங்கல் செய்வதற்கு முதலில் தேவையான அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்து நன்கு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 10 நிமிடம் ஊறியதும் ஊறிய பருப்பை குக்கரில் சேர்த்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் விட்டு பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு நான்கு விசில் விட்டு எடுங்கள். நன்கு தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி குழைவாக வெந்திருக்கும்.

மறுபுறம் ஒரு வாணலியில் 200 கிராம் அளவிற்கு ரவையை சேர்த்து மீடியம் ஃபிளேமில் அடுப்பை வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு ஐந்து நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரில் இருக்கக்கூடிய பருப்பை நன்கு மசித்து மூன்று கப் கூடுதலாக தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து வந்ததும் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு நிமிடம் மூடி போட்டு அப்படியே விடுங்கள். தண்ணீர் முழுவதையும் உரிந்து ரவை நன்கு வெந்து வரும்.

- Advertisement -

இந்த சமயத்தில் இப்பொழுது வாணலியில் தேவையான அளவிற்கு நெய் விட்டு காய விடுங்கள். நெய் காய்ந்ததும் முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் அதே நெய்யில் ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். துருவிய இஞ்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வெறும் மூணே பொருள் இருந்தா போதும் சுகர் நெய் எதுவுமே சேர்க்காம சுலபமா கோதுமை அல்வா செய்யலாம் தெரியுமா? அது எப்படிங்கன்னு ஆச்சரியமா இருக்கா? வாங்க அதையும் தெரிஞ்சுக்கலாம்.

பின் தேவைப்பட்டால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாயை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் நறுக்கிய மல்லி தழையையும் போட்டுக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடுங்கள் இது ஆப்ஷனல்தான்! பின் தாளிப்பை ரவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான் ஒரு நிமிடம் நன்கு பிரட்டியதும் அடுப்பை அணைத்து சுடசுட பரிமாற வேண்டியது தான். அலாதியான சுவையுடன் இருக்கக்கூடிய இந்த ரவை பொங்கலை இதே மாதிரி நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -