வெறும் மூணே பொருள் இருந்தா போதும் சுகர் நெய் எதுவுமே சேர்க்காம சுலபமா கோதுமை அல்வா செய்யலாம் தெரியுமா? அது எப்படிங்கன்னு ஆச்சரியமா இருக்கா? வாங்க அதையும் தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

கோதுமை அல்வாவை செய்வதை பொருத்த வரையில் அது கொஞ்சம் பெரிய வேலை தான். முதலில் மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதன் பிறகு அதை அதிக நேரம் ஊற விட்டு, அந்த தண்ணீர் எடுத்து செய்வது என கொஞ்சம் வேலைகள் நீண்டு கொண்டே செல்லும். அது மட்டுமின்றி இந்த முறையில் செய்யும் பொழுது அதிக அளவில் நெய் சேர்த்தும் செய்ய வேண்டும். இப்படி செய்வது எல்லோராலும் முடியாது. இந்த சமையல் குறிப்பு பதிவில் மிகவும் எளிமையான முறையில் கோதுமை அல்வாவை எப்படி சுவையாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த அல்வா செய்வதற்கு முதலில் அரை கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து இந்த கோதுமை மாவை சேர்த்து ஒரு மூன்று நிமிடம் வரை கை விடாமல் லேசாக வருத்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவில் வாசம் வரும் வரை வறுத்தால் போதும். கோதுமை மாவின் நிறம் மாறி விடக்கூடாது. அப்படி வறுத்தப் பிறகு இதை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மீடியம் சைஸ் தேங்காய் நன்றாக அரைத்து இரண்டு கப் அளவுக்கு திக்கான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் பாலை இப்போது கோதுமை மாவில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இத்துடன் முக்கால் கப் அளவு வெல்லத்தை தூள் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வெல்லம் கல் மண் இல்லாத சுத்தமான வெல்லமாக பார்த்து வாங்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கோதுமை மாவில் தேங்காய் பால், வெல்லம் கலந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து ஒரு முறை அடித்து எடுத்து விடுங்கள். இதன் மூலம் கட்டிகள் இல்லாமல் போவதுடன், இது ஒரு கிரீமி பதத்திற்கு நமக்கு கிடைத்து விடும். அடுத்து அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த இந்த கோதுமை மாவு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நாம் ஏற்கனவே எடுத்து வைத்து இன்னொரு கப் தேங்காய் பாலையும் சேர்த்து கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் மட்டும் சேர்த்து அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து 10 நிமிடம் கைவிடாமல் கலந்து கொண்டே இருந்தால் போதும் இது அல்வா பதத்திற்கு வந்து விடும். இதற்கு நெய் எதுவும் சேர்க்க வேண்டாம் தேங்காய் பாலில் இருக்கும் எண்ணையை இந்த அல்வா ரெசிபிக்கு போதுமானது.

இதையும் படிக்கலாமே: இன்னுமா இட்லி செய்ய அரிசி உளுந்து எல்லாம் ஊற வச்சு அரைச்சுக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் எதுவுமே இல்லாமாலே மல்லி பூ மாதிரி இட்லி செய்யலாம் தெரியுமா?

அடுத்து இதை ஒரு கிண்ணத்தில் அடியில் கொஞ்சமாக நெய் தேய்த்து கொள்ளுங்கள். இது இந்த அல்வா ஒட்டாமல் வருவதற்கு மட்டுமே, அதன் பிறகு இந்த அல்வாவை ஊற்றி 10 நிமிடம் கழித்து எடுத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு ஒரு தட்டிற்கு மாற்றி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு சாப்பிட்டு பாருங்கள். அப்படியே வாயில் வைத்தவுடன் கரைந்து தொண்டைக்குள் இறங்கி விடும். அவ்வளவு அருமையான அதே நேரத்தில் ஆரோக்கியமான அல்வா தயார்.

- Advertisement -