10 நிமிடம் போதும் இந்த மெது வடை செய்ய. உளுந்தை ஊற வைத்து அரைக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ரவை இருக்கா உங்க வீட்டில.

vadai3
- Advertisement -

உளுந்தை ஊற வைத்து கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து அதன் பின்பு தான் சாஃப்டான மெதுவடை சாப்பிட வேண்டுமா. அந்தக் காலம் இப்போது மலையேறி போய்விட்டது. உங்க வீட்ல ரவை இருக்கா. பத்தே நிமிடத்தில் சூப்பரான இந்த மெதுவடை தயார். இந்த ரவை மெதுவடை ருசி அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான சிம்பிளான ஸ்நாக்ஸ் ரெசிபி உங்களுக்காக. ரவையை வைத்து மெதுவடை செய்தால் நல்லா இருக்குமா என்று யோசிக்காதீங்க. ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. அப்போதுதான் இந்த வடையின் சுவை உங்களுக்கு தெரியும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். உப்பு தூள் – 1/2 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து தண்ணீரை கொதிக்கவைக்க வேண்டும். அதன் பின்பு 1 1/2 கப் ரவையை, கடாயில் கொதிக்கும் தண்ணீரில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை கட்டி படாமல் ஒரு கரண்டியை வைத்து கலந்துவிட வேண்டும். ரவை கெட்டி பதத்தில் வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு 2 நிமிடம் ரவையை வேக விடுங்கள். அதன் பின்பு மூடியைத் திறந்து இந்த ரவையை கரண்டியால் நன்றாக கலந்துவிட்டு, கட்டிகளை நசுக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். (1 கப் அளவு ரவைக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீர் சரியானதாக இருக்கும். எந்த கப்பில் ரவையை அளக்கிறீர்களோ, அதே கப்பில் தண்ணீர் அளந்து எடுத்து ஊற்றிக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

கடாயில் இருக்கும் இந்த வெந்த பக்குவமான ரவையை சூடாக உடனடியாக ஒரு பௌலில் மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இதோடு சீரகம் – 1 ஸ்பூன், மிளகு –  தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, லெமன் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்கள் கையை கொண்டு ரவையை நன்றாக பிசைய வேண்டும். தேவைப்பட்டால் உப்பு இந்த இடத்தில் சரிபார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவு கெட்டியான ரவை உப்புமா போல இருக்க வேண்டும். உளுந்து மாவு போல தளதளவென இருக்காது. அதையும் கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கையில் கொஞ்சமாக எண்ணெயை தடவி கொண்டு கூட இதை வடை போல தயார் செய்து கொள்ளலாம். (ரொம்ப நேரம் ரவையை திறந்தபடி ஆற வைத்தால் ட்ரையாக மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

தயாராக இருக்கும் இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, வடை போல உள்ளங்கைகளில் வைத்து தட்டி, நடுவில் ஒரு ஓட்டை போட்டு எல்லா மாவையும் வடை போலவே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்து வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பாருங்கள் சூப்பரான ரவை மெதுவடை தயார்.

தொட்டுக்கொள்ள ஒரு டொமேட்டோ சாஸ் அல்லது காரசாரமான புதினா சட்னி தேங்காய் சட்னி வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -