ரவை இருக்கா உங்க வீட்ல. ஐந்தே நிமிடத்தில் ஆரோக்கியம் தரும் அடை தயார்.

adai2
- Advertisement -

வீட்டில் இட்லி தோசை மாவு இல்லாத சமயத்தில் இப்படி ரவையை வைத்து இன்ஸ்டன்டான அடையை செய்து பாருங்கள். இந்த அடை சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். அதேசமயம் உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ரெசிபி ஆகவும் இருக்கும். ஏனென்றால் இதில் காய்கறிகளை நாம் சேர்க்கப் போகின்றோம். குறிப்பாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட் பீட்ரூட் சேர்த்து செய்யக்கூடிய அடை ரெசிபி இதோ உங்களுக்காக.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 கப் அளவு ரவையை போட்டு லேசாக வறுத்து ஒரு பவுலின் கொட்டிக் கொள்ளுங்கள். அடைக்குத் தேவையான அளவு உப்பு, அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், புளித்த தயிர் 2 டேபிள் ஸ்பூன், ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலந்து இந்த ரவையை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் ஊறிய பின்பு இது கட்டியாக நமக்கு கிடைத்திருக்கும்.

- Advertisement -

இந்த ஊறிய ரவை மாவோடு சீரகம் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, கேரட் துருவல் – 1 கைப்பிடி அளவு, பீட்ரூட் துருவல் – 1 ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மீண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இதை அடை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். ரொம்பவும் தண்ணீராக கரைக்காதீங்க.

அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து, அது மிதமாக சூடான பின்பு எண்ணெய் தடவி இந்த அடை மாவை தோசை கல்லில் ஊற்றி லேசாக தீட்டி தர வேண்டும். ரொம்பவும் மெல்லிசாக இதை தீட்ட முடியாது. அடை தோசை அளவுக்கு கொஞ்சம் மொத்தமாக ஊற்றி மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சிவக்க விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவைத்து சுட சுட சாம்பார் அல்லது சட்னியோடு பரிமாறி பாருங்கள்.

- Advertisement -

அட்டகாசமான சுவையாக இருக்கும் இந்த இன்ஸ்டன்ட் அடை உங்களுக்கு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

பின்குறிப்பு: இந்த அடையில் தேவைப்பட்டால் பொடியாக துருவிய முட்டை கோஸ், பொடியாக நறுக்கிய காளான், அல்லது குடைமிளகாய் இவைகளை கூட சேர்த்து நீங்கள் சுட்டுக் கொள்ளலாம். காய்கறிகளை அளவோடு சேருங்கள். மாவுக்கு தகுந்த காய்கறிகள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -