தனது பாணியில் ஆஸ்திரேலிய வர்ணனையாளரை கிண்டல் செய்து ட்வீட் செய்த சேவாக்

sehwaq

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சிட்னி நகரில் அடுத்து நடக்க விருக்கும் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி சிட்னி நகரை அடைந்தது.

jadeja 1

இந்திய அணியின் இந்த வெற்றியினை தொடர்ந்து இந்திய ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது வாழ்த்துக்களை இந்திய அணிக்கு வலைதளத்தின் மூலம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதிலும் குறிப்பாக, இந்திய அணியை சேர்ந்த முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரரான சேவாக் டிவீட்டர் மூலம் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமின்றி ஆஸ்திரேலியா வரணனையாளரை கிண்டலடித்துள்ளார்.

அவருடைய ட்வீட் : மெல்போர்ன் நகரில் இந்திய அணி பெற்ற வெற்றி மிகசிறந்த வெற்றியாகும்.அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் சிட்னி போட்டியில் வென்று வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது என்றும் மேலும் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்ளூர் வீரர்கள் தங்களது திறமையினை நிரூபித்துவிட்டனர் என்று பதிவிட்டு இருந்தார்.

உள்ளூர் வீரர் என்று சேவாக் குறிப்பிட்டது அகர்வாலை தான். அகர்வால் முதல் இன்னிங்ஸ் ஆடும் போது அவரை ஆஸ்திரேலிய வர்ணனையாளர் உள்ளூர் வீரர் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அகர்வால் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பதிலளித்தார். தற்போது அந்த வர்ணனையாளருக்கு தனது பாணியில் பதிலளித்துள்ளார் சேவாக்.

இதையும் படிக்கலாமே :

தனது ரசிகருக்கு சற்றும் யோசிக்காமல் கோலி அளித்த புத்தாண்டு பரிசு ! என்ன கொடுத்தார் தெரியுமா?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்