ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வெற்றி 1983 உலகோப்பையை விட பெரிய வெற்றி – ரவி சாஸ்திரி

ravi

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 71 ஆண்டுகளில் முதன் முறையாக (2-1)வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று அனைத்து வகையிலும் ஆஸ்திரேலிய அணியை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியை ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று நிகழ்வையும் ஏற்படுத்தியுள்ளது.

koli

இந்த நிலையில் இந்திய அணி அடுத்து நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்காக பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் வலைத்தளம் மூலம் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவிசாஸ்திரி இந்த வெற்றி குறித்து கூறிய கருது தற்போது முன்னாள் வீரர்களிடையே சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து : இந்திய அணியின் இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி 1983ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் வெற்றியை விட பெரியது என்று கூறினார். மேலும் இந்த டெஸ்ட் தொடரே அணியின் வலிமையினை சோதிக்கும் ஒரு வழியாக இருந்தது. அதை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

kapil

இந்த கருத்தினை எதிர்த்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். ரவி சாஸ்திரி இந்த தொடர் வெற்றியை 1983 உலகக்கோப்பையுடன் எப்படி ஒப்பிடலாம். இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல ஒரு வரலாற்று நிகழ்வுதான் இருப்பினும் அன்றைய இந்தியஅணியை பழித்து பேசுவது போல உங்களின் கருது உள்ளது என்று முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பும்ரா – காரணம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்