ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பும்ரா – காரணம்

pujara

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 71 ஆண்டுகளில் முதன் முறையாக (2-1)வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 12ஆம் தேதி துவங்க உள்ளது.

team

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், தவான்,ராயுடு, கார்த்திக், ஜாதவ், தோனி, பாண்டியா, குல்தீப், சாஹல், ஜடேஜா, புவனேஷ்வர் குமார்,கலீல் அகமது, மற்றும் ஷமி.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தினை இந்திய அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து போட்டிகளில் ஆடிவரும் பும்ரா உலககோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படவுள்ளது என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது .

bumrah

தற்போது உள்ள இந்திய அணி தரமான அணி மேலும்,இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அந்த தொடரில் விளையாடும் வீரர்கள் காயம் அடையாமல் இருக்க அணி நிர்வாகம் அவர்களது உடல் தகுதியினை தொடர்ந்து சரிபார்த்து வருகிறது.

இதையும் படிக்கலாமே :

நான் உலககோப்பையில் இடம்பெறாமல் போனாலும் பரவாயில்லை. பண்ட் நிச்சயம் ஆட வேண்டும் – யுவராஜ் சிங்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்